ஹைக்கூ
'பசங்க', 'மெரினா' படங்கள் வரிசையில் பாண்டிராஜ் இயக்கிவரும் அடுத்த படம் 'ஹைக்கூ'. முழுக்கக் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தான் படித்த நற்சாந்துபட்டி ராமநாதபுரம் செட்டியார் மேல்நிலைப்பள்ளிக்கு நன்றி செலுத்தும் வகையில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என 1500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளும் வகையில் படத்தின் இறுதிக்காட்சியைப் படமாக்கியுள்ளார் பாண்டிராஜ். சூர்யா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.அரவிந்த்

© TamilOnline.com