ஷூட்டிங் ஸ்டார்ஸ் அறக்கட்டளை Spring Break Camp for Common Core Bootcamp போன்றவற்றை நடத்துகிறது. இது உயர்கல்வி மாணவர்களால் நடத்தப்படும் லாபநோக்கற்ற அமைப்பாகும். இந்த நிகழ்ச்சிகளால் திரட்டப்படும் நிதி ப்ஃரீமான்ட் ஒருங்கிணைந்த கல்வி மாவட்டம் மற்றும் சர்வதேச அளவில் கல்லூரிப் படிப்புக்கு உதவித்தொகையாக அளிக்கப்படுகிறது.
ஜேம்ஸ் லோகன் பள்ளியின் சீனியர் அஜீத் நாரயணன், 2010ம் ஆண்டு இதைத் தொடங்கினார். அமெரிக்கன் ஹைஸ்கூல் சீனியர் அகில் காந்தியின் தொடர் ஆதரவு மற்றும் ஃப்ரீமான்ட் யூனிஃபைட் ஸ்டுடன்ட் ஸ்டோர் உதவியுடன் விரிவடைந்து வருகிறது.
இதன் தற்போதய தலைவர் தேவி நல்லகுமார் (ஜூனியர், மிஷன் சான்ஹோசே ஹைஸ்கூல்) கூறுகிறார்: எங்கள் வசந்தகாலக் கேம்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டு முதல் ஆறாம் வகுப்புவரையிலான குழந்தைகள் பங்கேற்றார்கள். ஆங்கிலம், கணக்கு பாடத்திட்டத்தில் காமன்கோர் ஸ்டாண்டர்டைச் செயல்படுத்தி, தேர்வெழுதும் உத்திகளை இதில் சொல்லிக்கொடுத்தோம்.
முதுநிலை மாணவர்களே இளநிலை மாணவர்களுக்குக் கற்பிக்கும் 1:1 பயிற்சிமுறை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகப் பெற்றோர்கள் கூறுகிறார்கள். இருபதுக்கும் மேற்பட் சீனியர் மாணவர்கள் வகுப்புகளில் பணியாற்றினார்கள். ஒரு புதுமையான சந்தோஷமான அனுபவமாகவே யாவருக்கும் இருந்தது. சிலர் கோடை மற்றும் குளிர்கால விடுமுறையிலும் இந்தப் பயிற்சி தர முடியுமா என்று ஆர்வத்தோடு கேட்கிறார்கள்.
இந்த ஆண்டு கேம்ப்பில் 5 வசதியற்ற, சமூக-பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்குக் கட்டணம் தளர்த்தப்பட்டது. இதே மாதிரியான முகாம்கள் விரிகுடாப்பகுதியின் வேறிடங்களிலும், ஜார்ஜியா, நியூ யார்க், மாசசூசெட்ஸ், வாஷிங்டன் மாநிலங்களிலும் நடந்தது குறிப்பிடத் தக்கது.
மேலும் விபரங்களுக்கு: www.shooting-stars-foundation.org |