பேக் செய்த கோவைக்காய் வறுவல்
தேவையான பொருட்கள்
கோவைக்காய் துண்டங்கள் - 2 கிண்ணம்
கடலைமாவு - 2 மேசைக்கரண்டி
அரிசிமாவு - 1 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிதளவு
ஓமம் - ஒரு சிட்டிகை
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்துமல்லிவிதைத் தூள் - 1/2 தேக்கரண்டி
மாங்காய்த்தூள் (ஆம் சூர்) - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை
கன்வென்ஷனல் அவனை 400 டிகிரி ஃபாரன்ஹீட்டில் ப்ரிஹீட் செய்துகொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றுசேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். ஒரு பேக்கிங் ட்ரேயில் சிறிது வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி, அதன்மீது கோவைக்காய் கலவையைப் பரப்பி வைத்து பொன்னிறம் ஆகும்வரை பேக் செய்யவும். (அவ்வப்போது சரி பார்த்து கோவைக்காயைத் திருப்பி விடவும்)

சுவையான கோவைக்காய் வறுவல் தயார்.

பவித்ரா வெங்கடேஷ்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com