உலர் செர்ரி ரசம்
b>தேவையான பொருட்கள்
உலர் செர்ரிப்பழம் (30 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தது) - 10
வேகவைத்த துவரம்பருப்பு நீர் - 1 கிண்ணம்
மஞ்சள்தூள் - சிறிதளவு
நெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கொத்துமல்லி - அலங்கரிக்க
தண்ணீர் - தேவைக்கேற்ப

வறுத்து அரைக்க
மிளகு - 6
தனியா - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
துவரம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - மிகச்சிறிதளவு

செய்முறை
வறுத்து அரைக்க வேண்டியவற்றை முதலில் வாணலியில் நன்கு வறுக்கவும். பின்னர் ஊறவைத்த செர்ரிப் பழங்களோடு சேர்த்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் பருப்பு நீர், அரைத்த விழுது, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர், உப்புச் சேர்த்து நுரைத்து வரும்வரை கொதிக்கவிடவும். தாளிக்க ஒரு கடாயில் நெய்யைச் சூடாக்கி, அதில் கடுகுசேர்த்து, அது பொரிந்தவுடன் தீயைக்குறைத்து சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து, சிறிதுநேரம் வதக்கி ரசத்துடன் சேர்க்கவும். அடுப்பிலிருந்து இறக்கி நறுக்கிய பச்சைக் கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.

பவித்ரா வெங்கடேஷ்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com