நவம்பர் 19ம் தேதி முதல், 30ம் தேதிவரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிபோர்னியா வளைகுடா பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்ன்க்கும் வருகை தர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலிய தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, அரவணைக்கும் ஞானி (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள். தம்மிடம் வருவோர் ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, தமது அளவற்ற அன்பை அம்மா வாரி வழங்குகிறார். மக்களின் துயரங்களை நீக்குவதையே தமது வாழ்வெனக் கொண்டு ஏராளமானவர்களது துன்புற்ற இதயங்களுக்கு ஆறுதலளித்து வருகிறார்.
அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்: சான் ரமோன், கலிபோர்னியா 11.19 - 11.24
டியர்பார்ன், மிச்சிகன் 11.26 - 11.30
இரண்டு இடங்களிலும், இலவச பொது நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக முகாம்கள் நடைபெற உள்ளன. இலவச பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீக சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனைகள் நடைபெறும். ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர் |