மேற்கு ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி பிக்னிக்
மார்ச் 29, 2015 அன்று மேற்கு ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி (வெஸ்தைமர்) இந்த ஆண்டின் பருவகாலப் பிக்னிக்கை பேலாண்ட் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ்ப்பள்ளி சார்ந்தோர் மட்டுமின்றி, ஹூஸ்டன் தமிழர்கள் நூறு பேர் பங்கேற்றனர்.

அதிசய முட்டை தேடுதல், ஒரு நிமிடப் போட்டிகள் போன்றவை நடைபெற்றன. உணவுக்குப் பின்னர் கனெக்‌ஷன் எனப்படும் படங்களை இணைத்துப் பெயர் கண்டறியும் போட்டி நடத்தப்பட்டது. முகத்தில் வண்ணம் தீட்டல், பலூன் வைத்து வடிவங்கள் செய்வது போன்றவை சிறார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. உரியடித்தல் போட்டியும் நடைபெற்றது. சுற்றுலாவிற்கு ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளித் தலைவர், துணைத்தலைவர், சுகர்லண்ட் பள்ளி முதல்வர் ஆகியோரும் வந்திருந்தனர். இறுதியில் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் நன்றி கூற, நிகழ்வு நிறைவெய்தியது. வெஸ்தைமர் தமிழ்ப்பள்ளி தற்போது மேற்கு ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: www.houstontamilschools.org

புனிதா தங்கமுத்து,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com