நெவார்க்: ஹனுமான் கோவில் ஆண்டுவிழா
2015 ஏப்ரல் 3 முதல் 5 வரை கலிஃபோர்னியா மாகாணத்தின் நெவார்க் நகரத்திலுள்ள ஸ்ரீ சங்கடமோசன ஹனுமான் கோவிலின் இரண்டாவது ஆண்டுவிழா பண்டிட் கோவிந்த்ஜி தலைமையில் விமர்சையாக நடைபெற்றது. நெவார்க் மேயர் திரு. ஆலன் எல். நேகி முக்கிய விருந்தினராகப் பங்கேற்றார். மூன்று நாட்களும் ஸ்ரீஸூக்த ஹோமம், ஸ்ரீராம கோடிபத்ர சமர்ப்பணம், சங்கீத கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன.

ஸ்ரீராம கோடிபத்ர சமர்ப்பணம் மாதந்தோறும் புனர்வசு நக்ஷத்ர தினத்தில் நடக்கிறது. பக்தர்கள் இதில் கலந்துகொண்டு அருளைப் பெறலாம்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com