கனெக்டிகட்: ஷாந்தலா புல்லாங்குழல் இசை
ஏப்ரல் 11, 2015 அன்று கனெக்டிகட் ராகா குழுவின் சார்பாகத் திருமதி. ஷாந்தலா சுப்ரமணியன் அவர்களின் புல்லாங்குழல் கச்சேரி ஸ்ரீ சத்யநாராயணர் கோவில் வளாகத்தில் நடந்தது. இதற்குத் திரு. அவனீச்வரம் வினு வயலினும், திரு. பாலக்காடு மகேஷ் மிருதங்கமும் வாசித்தனர்.

குழலோசையில் நாட்டைக் குறிஞ்சி குதித்தோடி வர, சுழலும் காற்றில் சுகந்தம் வீசியது. ஜகன்மோகினி, அம்ருதவர்ஷிணி, சிம்மேந்த்ர மத்யமம், சாமா, நாசிகபூஷணி என்று ராகங்கள் அணிவகுத்துச் செவியை நிரப்பின. பின்னர் பாரதியின் சின்னஞ்சிறு கிளி, கதனகுதூகலம் என மனதை நிறைவித்தன.

மேலும் விவரங்களுக்கு: www.ragact.org

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்

© TamilOnline.com