18 ஏப்ரல் 2015 அன்று சிகாகோவில் பாபநாசம் சிவன் இசைவிழா ஐந்தாவது ஆண்டாக நடைபெற்றது. அவரது பேரன் திரு. அஷோக்ரமணி இதனை 'பாபநாசம் சிவன் ஃபைன் ஆர்ட்ஸ்' மூலம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறார். காலை 9.00 மணிமுதல் வாய்ப்பாட்டு, வயலின், கீபோர்டு, மிருதங்கம், பரதநாட்டியம் என பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வனிதா சுரேஷ், விஜயா தேசிகன், சிவானுஜா பாலாஜி ஆகியோர் நடுவர்களாக இருந்து பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
பிற்பகலில் வனிதா சுரேஷ், மினு கார்த்திக், வர்ஷிணி ராமநாதன், பாபநாசம் அசோக் ரமணி கச்சேரிகளும் மீனாட்சி கணேசன் நாட்டியமும் நடைபெற்றன. வசந்தி ஐயர், ராஜேஷ் சேலம், வித்யா பாபு, வனிதா சுரேஷ், விஜயா தேசிகன், சிவானுஜா பாலாஜி, மினு கார்த்திக் போன்ற ஆசிரியைகளைக் கௌரவித்து போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கிப் பாராட்டினார் அஷோக் ரமணி.
சிகாகோ, மாடிஸன், மில்வாக்கி, விஸ்கான்சின் நகரங்களிலிருந்து ஆசிரியைகள் திறம்படக் குழந்தைகளைப் பயிற்றுவித்து அனுப்பியிருந்தனர். சிவன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி கீழ்க்கண்ட இடங்களிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளது:
இடம் | நாள் | வாஷிங்டன் | மே, 2 | டாலஸ் | மே, 9 | சான் ஹோஸே | மே 16 & 17 | டெட்ராய்ட் | ஜூன் 6 |
தொடர்புக்கு: அஷோக் ரமணி தொலைபேசி: 607.279.7815 மின்னஞ்சல்: ashokramani10@yahoo.com விண்ணப்பம் பெற: www.shivanisai.org
மினு, இல்லினாய்ஸ், சிகாகோ |