கொலம்பஸ் தமிழ்ப் பள்ளி கலந்துரையாடல்
2015 ஏப்ரல் 25, 26 தேதிகளில் கொலம்பஸ் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பள்ளி மற்றும் பாரதீய இந்து ஆலயத்தின் குருகுல் தமிழ்ப் பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடையே சமூக சேவை குறித்து ஒரு கலந்துரையாடல் செய்தனர். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவுதல், மனநலம் குன்றிய சிறப்புக் குழந்தைகளின் வாழ்விற்குத் துணைபுரிதல் போன்ற பல வாய்ப்புகளை தமிழ்ப்பள்ளி குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் நகைச்சுவையோடு விளக்கிப் பேசினார், தமிழ்நாடு அறக்கட்டளை துணைத்தலைவர் முனை. சோமலே சோமசுந்தரம்.

இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டையும், கலாசாரத்தையும், ஈகையையும் புதிய பார்வையில் தம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளதென கொலம்பஸ் தமிழ்ச் சங்கப் பள்ளி முதல்வர் திரு. மணிவண்ணன் கூறினார். தமது பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தமிழகத்தில் சேவை செய்யும் ஆர்வத்தை இந்நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதென குருகுல் பள்ளி முதல்வர் திரு. பத்மநாபன் அறிவித்தார். கோடை விடுமுறையில் தமிழகம் செல்லும்போது TNF-ABC கல்வித்திட்டம், சிறப்புக் குழந்தைகளுக்கான அன்பாலயம் போன்றவற்றைத் தம் பிள்ளைகளுக்கு பார்த்தால் பிறரின் துயரங்கள் அவர்களுக்குத் தெரியவரும், உதவும் மனப்பான்மை அதிகரிக்கும் என்று பெற்றோர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஏப்ரல் 27 அன்று நடைபெற்ற கொலம்பஸ் தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழாவிலும் அறக்கட்டளையின் திட்டங்களைப் பற்றி திரு. சோமலெ சோமசுந்தரம் பேசினார்.

ஆனந்த்,
கொலம்பஸ், ஓஹையோ

© TamilOnline.com