சியாட்டில்: 'சிதம்பர ரகசியம்' நாடகம்
2015 ஜூன் 19, 20 தேதிகளில் சியாட்டிலின் இண்டஸ் குழுவினர் 'சிதம்பர ரகசியம்' என்ற நாடகத்தை Kirkland Performance Center (350 Kirkland Ave, Kirkland WA 98033) வளாகத்தில் மூன்று காட்சிகளாக அரங்கேற்ற இருக்கிறார்கள். இந்தக் குழுவின் பத்தாவது ஆண்டுப் படைப்பாகும் இந்த நாடகம். தாம் வழங்கும் நாடகங்களின் மூலம் திரட்டப்படும் நிதியை இக்குழுவினர் இந்தியாவில் இயங்கும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குகின்றனர். இதுவரை இவ்வாறு ரூ.10,000,000 வரை வழங்கியுள்ளனர். இதற்கு முன்னர் சுஜாதாவின் 'கடவுள் வந்திருந்தார்' தவிர 'சக்கரவியூகம்', 'உள்ளே வெளியே', 'நினைத்தாலே நடக்கும்' உட்படப் பல சுவையான நாடகங்களை வழங்கியுள்ளனர். அரங்க நிர்மாணம், தந்திரக்காட்சிகள், கதை சொல்லும் பாணி என நாடகத்தின் பல அம்சங்களிலும் புதுமைகளைக் கையாள்வதில் இவர்கள் சமர்த்தர்கள்.

மேலதிகத் தகவலுக்கு: www.IndusCreations.orgதமிழ்த்தேனீ,
சியாட்டில்

© TamilOnline.com