2015 மே 30ம் தேதிமுதல், ஜூலை 20ம் தேதிவரை 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகைதர இருக்கிறார். தெய்வீகத்தின் இருப்பிடமான அம்மாவை 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்று அழைக்கிறார்கள். மக்களின் துயர் துடைக்கவே தமது வாழ்நாளை அம்மா அர்ப்பணித்துள்ளார். அம்மா வருகைதர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
ஊர் | தேதி | சியாடல் | 05.30 - 06.01 | சான் ஃபிரான்சிஸ்கோ- விரிகுடாப் பகுதி | 06.03 - 06.12 | லாஸ் ஏஞ்சலஸ் | 06.14 - 06.18 | ஸேண்ட ஃபே | 06.20 - 06.23 | டாலஸ் | 06.25 - 06.26 | அட்லாண்டா | 06.28 - 06.29 | சிகாகோ | 07.01 - 07.03 | வாஷிங்டன் டி.சி. | 07.05 - 07.06 | பாஸ்டன் | 07.09 - 07.10 | நியூ யார்க் | 07.12 - 07.14ி | டொரான்டோ, கனடா | 07.17 - 07.20 |
இலவசப் பொதுநிகழ்ச்சிகளில் அம்மா தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனைகள் நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இவற்றில் ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.
அம்மாவின் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.amritapuri.org/activity மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர் |