சங்கம் ஆர்ட்ஸ்: 'சங்கிலிகள்' - நிழல்களின் காதல் கதை
மே 30, 2015 அன்று சங்கம் ஆர்ட்ஸ் "சங்கிலிகள் - நிழல்களின் காதல் கதை" நிகழ்ச்சியை மாண்ட்கோமரி தியேட்டரில் (271 S Market St., San Jose, CA 95113) அரங்கேற்ற உள்ளது. பரதநாட்டிய மேதை சவிதா சாஸ்திரி நமது மரபுவழிக் கதைகளை மரபுதாண்டிய சிந்தனை தூண்டும் நாட்டியத்தின் மூலம் இதனை அளிக்கிறார்.

'சங்கிலிகள்' ஒரு இளமங்கையின் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குகிறது. அவள் வாழ்க்கையைத் தன் இஷ்டத்திற்கு வாழமுடிகிறதா, இல்லை, குடும்பம் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்காக ஆசாபாசங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறதா? காலம் மாறினாலும் எல்லைகள் விரிந்தாலும் வேலிகள் இருக்கின்றன. இந்த நாட்டிய நிகழ்ச்சி விருப்பத்திற்கும் சமரசத்திற்கும் உள்ள இடைவெளியை ஆய்கிறது.

A.K. ஸ்ரீகாந்த் அவர்களின் கதைக்கு ராஜ்குமார் பாரதியின் இசை மெருகேற்றுகிறது. நடனம், உடை, இசை என்று யாவுமே நுணுக்கமாகச் செய்யப்பட்டுள்ளன. "சிலிக்கான் வேல்லி உலகக் கலாசாரத்தின் சுவையான கதம்பம். அதுபோல, சவிதா சாஸ்திரி போன்ற கலைஞர் நமது கலாசாரத்தை எல்லா நாட்டினரும் சுவைக்கும்படி அளிக்கின்றார்" என்கிறார் சங்கம் ஆர்ட்சின் தலைவி உஷா ஸ்ரீநிவாசன்.

சலுகையில் நுழைவுச் சீட்டு வாங்க "தென்றல்" என்னும் குறியீட்டை chains.brownpapertickets.com என்னும் இணையதளத்தில் உபயோகியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு
வலைமனை: info@sangamarts.org



கயல் கிருஷ்ணா,
கூபர்ட்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com