போலிங்ப்ரூக்: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
மே 24, 2015 ஞாயிறு மதியம் 2:00 மணிக்கு ஃபவுன்டன்டேல் பொதுநூலகத்தில் (Fountaindale Public Library, 300 W. Briarcliff Road Bolingbrook, IL 60440) இலங்கை முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். முள்ளிவாய்க்கால் நினைவாக இங்குள்ள பூங்காவில் சில வருடங்களுக்கு முன்பு நடப்பட்டு, வரலாறு கூறும் நினைவுச் சின்னமாக வளரும் இந்த விருட்சத்தின் அடியில் ஒன்றுகூடி, அந்தத் துயரம்தோய்ந்த நாளை நினைவிற்கொண்டு மலரஞ்சலி செலுத்தும் இந்த நினைவு நாள் வருடாவருடம் நடைபெறுகிறது. இவ்வருடம் மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மற்றைய நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்று உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலதிக விபரங்களுக்குஸ்கந்தகுமார்,
இல்லினாய்ஸ்

© TamilOnline.com