இவனுக்குத் தண்ணில கண்டம்
சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் தீபக் நாயகனாக அறிமுகமாகும் படம் இவனுக்குத் தண்ணில கண்டம். நாயகியாக நேஹா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், சுப்பு பஞ்சு, மனோபாலா, எம்.எஸ். பாஸ்கர், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நான் கடவுள் ராஜேந்திரன் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். சென்ட்ராயன் படம் முழுவதும் பெரும்பாலான காட்சிகளில் ஆங்கிலத்தில் பேசி கலக்கியுள்ளாராம். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தை எஸ்.என். சக்திவேல் இயக்குகிறார். கண்டம் தப்பிப் பிழைக்கட்டும்.

அரவிந்த்

© TamilOnline.com