சரித்திரம் பேசு


கிருபா - கன்னிகா நாயக, நாயகியாக அறிமுகமாகும் படம் சரித்திரம் பேசு. யோகேஸ்வரன் போஸ் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். அவருக்கு இணையாக தாரணி நடிக்கிறார். வில்லன் வேடத்தில் மதுரையின் புகழ்பெற்ற டாக்டர் சரவணன் நடிக்கிறார். தேவாவிடம் கிடாரிஸ்டாகப் பணியாற்றிய ஜெயகுமார் இசையமைக்க, ஸ்ரீமகேஷ் இயக்குகிறார். இப்படம்பற்றி அவர், "படத்தின் கதாநாயகர்களுக்கும் டாக்டர் சரவணனுக்கும் ஒரு மோதல் உருவாகிறது. அதற்குக் காரணம் டாக்டரின் உறவுக்காரப் பெண் ஒருத்தியின் காதலுக்கு அவர்கள் உதவியதுதான். அந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதா, சரவணன் மனம் மாறினாரா என்பதை அதிரடியாக ஆக்‌ஷன் கலந்து சொல்லவருகிறது சரித்திரம் பேசு" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com