அப்பா டக்கர்


ஜெயம் ரவி - த்ரிஷா, அஞ்சலி நாயக, நாயகிகளாக நடிக்கும் படம் அப்பா டக்கர். இவர்களுடன் முக்கிய வேடங்களில் பிரபு, விவேக், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூர்ணா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிராமத்தில் வசிக்கும் ஜெயம் ரவி அஞ்சலியைக் காதலிக்கிறார். வேலைதேடிச் சென்னை வரும் அவரை த்ரிஷா காதலிக்கிறார். இதை அறிந்த அஞ்சலி, சூரியின் உதவியுடன் அந்தக் காதலை உடைக்கப் போடும் திட்டங்களும், அது சொதப்புவதுமான ஜாலியான படம் இது. படத்தில் த்ரிஷாவுக்கு நாய்கள் மீது அன்புகொண்ட ஒரு மாடல் கேர்ள் வேடம். மதன்கார்க்கி, அண்ணாமலை பாடல்களை எழுத, தமன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சுராஜ்.

அரவிந்த்

© TamilOnline.com