அதிரடி


மன்சூர் அலிகான் தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் அதிரடி. நாயகிகளாக மௌமிதா சௌத்ரி, சஹானா, பூவிஷா ஆகியோர் நடிக்கின்றனர். கவ்யா, காயத்ரி, ராதாரவி, செந்தில், சிசர் மனோகர், கிங்காங், நெல்லை சிவா உள்ளிட்ட பலர் உடன் நடிக்கின்றனர். சிலம்பம், களரி, வாள்வீச்சு, மான்கொம்பு போன்ற சண்டைப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கும் பயில்வானாக மன்சூரலிகான் நடிக்கிறார். மறுபுறம் மதுபானக் கடைகளுக்குச் சென்று குடி, போதைப் பொருட்கள் ஆகியவற்றுக்கு அடிமையானவர்களின் காலில் விழுந்து தடுக்கும் சமூகப் போராளியாகவும் இருக்கிறார். அதைப் பார்க்கும் ஒரு தயாரிப்பாளர் தனது படத்தின் கதாநாயகனாக அவரை நடிக்க வைக்கிறார். இதனால் பலர் மன்சூருக்கு எதிரிகளாகிறார்கள். அங்கதான் தொடங்குது 'அதிரடி'. இசையும் மன்சூர் அலிகான் தானாம். பயங்கர அடிதடியா... சாரி... அதிரடியா இருக்கும்போல!

அரவிந்த்

© TamilOnline.com