'வாட்டாக்குடி இரணியன்', 'ஜித்தன்', 'யூத்', "ப்ரியமுடன்" போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா தனது பெயரை ப்ரியமுடன் ஷெல்வா என மாற்றிக் கொண்டு இயக்கும் படம் இது. விஜய் கார்த்திக், சம்பி ஆகிய புதுமுகங்கள் நாயக, நாயகியாக அறிமுகமாகின்றனர். "உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் வடசென்னையைக் களமாகக் கொண்டது இப்படம். அழகிய காதலையும், முரட்டுத் தனத்தையும் சரிசமமாகக் கொண்டதுதான் 'அராத்து'. 'டங்கா மாரி' விஜி இரண்டு பாடல்களை எழுதிப் பாடுகிறார். அராத்துக்கான வடசென்னையை நாங்களே வடிவமைத்து செட் போட்டுள்ளோம்" என்கிறார் ஷெல்வா. படம் அராத்தா இல்லாம இருந்தாச் சரி!
அரவிந்த் |