நவா டான்ஸ் தியேட்டரின் நடனமணிகள் பரதநாட்டியம் பாதையோரத்தையும் புனிதமாக்கும் என்பதைத் தமது 'Sacred Sidewalks' நிகழ்ச்சியால் நிரூபித்தனர். அதன் கலை இயக்குனர்கள் நதி திக்கேக் மற்றும் சோஃபியா வளத் ஆகியோருடன் வித்யா சுந்தரம், தனு ஸ்ரீதரன், வெர்டிகா ஸ்ரீவாஸ்தவா, விநீலா ரவ்வா போட்டடூரி, இஷா நம்பியார் இணைந்து ஏப்ரல் 10ம் நாளன்று சான் ஃபிரான்சிஸ்கோ மார்க்கெட் தெருவின் மரநிழலில் ஓர் அற்புதமான நடனநிகழ்ச்சியை வழங்கினர். ஜி.எஸ். ராஜன் இசையமைப்பில் 'மேகதூதுவன்', 'எவ்விடத்தில் எது பொருத்தம்' போன்ற படைப்புகளின் பாடல்களுக்கு அமைந்த நடனங்கள் அந்த வழியே சென்றோருக்குள் ஓர் ஆனந்த அலையைத் தோற்றுவித்தன என்றால் மிகையல்ல. யெர்பா பூனா கலை மையமும், ஜேம்ஸ் எல். நைட் அறக்கட்டளையும் நடைபாதைக் கலைநிகழ்ச்சிகளுக்கு ஊக்கமளிக்கின்றன. மார்க்கெட் தெருவின் ஷோ பாக்ஸை, கவுன்டர் பல்ஸ், ஜென்சன் ஆர்க்கிடெக்ட்ஸ் வடிவமைத்திருந்தனர்.
ஹெர்குலஸ் சுந்தரம், ஹெர்குலஸ், கலிஃபோர்னியா |