கணிதப் புதிர்கள்
1. ஐந்து வருடங்களுக்கு முன்னால் சுதாவின் வயது அவளது மகள் ராதாவின் வயதைப்போல் ஐந்து மடங்காக இருந்தது. தற்போது சுதாவின் வயது மகளின் வயதைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என்றால் சுதாவின் தற்போதைய வயது என்ன?

2) Aயின் வயது Bயின் வயதைவிட 5 வருடங்கள் அதிகம். Cயின் வயதைவிட ஐந்து வருடம் குறைவு. Bயும் Dயும் இரட்டையர்கள் என்றால் Dயைவிட C எத்தனை வயது பெரியவன்?

3) ஒரு சதுர வேலியின் ஒரு பக்கத் தூண்களின் எண்ணிக்கை 36 என்றால் வேலியில் உள்ள மொத்த தூண்களின் எண்ணிக்கை எவ்வளவு?

4) அது ஒரு மூன்று இலக்க எண். முதலாவதாக உள்ள எண் இரண்டாவது எண்ணின் பாதிக்கும் பாதி. மூன்றாம் எண், இரண்டாவது எண்ணைவிட மூன்று குறைவு என்றால் அந்த எண் என்ன?

5) 8, 13, ..., ...., 40, 53, 68 - இந்த வரிசையில் நடுவில் வர வேண்டிய எண்கள் எது, ஏன்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com