தேவையான பொருட்கள் பழுப்பரிசி - 2 கிண்ணம் துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி பயத்தம்பருப்பு - 1/4 கிண்ணம் கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு மிளகாய் வற்றல் - 3 அல்லது 4 பச்சை மிளகாய் - 1 உப்பு - தேவைக்கேற்ப நெய் - 1 தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை பழுப்பரிசியைத் தண்ணீரில் ஒருமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து வைத்துக்கொள்ளவும். பயத்தம்பருப்பில் வாசனை வர வறுத்துக் கொண்டு வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், மிளகாய்வற்றல், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் எல்லாம் தாளித்து தேங்காயை அதில் போட்டுச் சிவக்க வறுக்கவும். கறிவேப்பிலை உப்புச் சேர்த்து, 5 1/2 கிண்ணம் தண்ணீர்விட்டு பழுப்பரிசி, பயத்தம்பருப்பு இவற்றைப் போட்டு குக்கரில் வேகவிடவும். ஆறு அல்லது ஏழு விசில் விடலாம். உப்புமா உசிலி தயார். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிக நல்லது. தேங்காய்க்குப் பதில் வெங்காயம் வதக்கிப் போட்டும் செய்யலாம். தக்காளிச் சட்னி அல்லது மிளகாய் புளிப்பச்சடியுடன் சாப்பிட்டால் பரமசுகம்!
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி |