நாதலயா: 'சிவா-சக்தி' இசைநிகழ்ச்சி
ஏப்ரல் 5, 2015 அன்று மதியம் 2:30 மணிக்கு நாதலயா இசைப்பள்ளி ஷீரடிசாய் பரிவார் (1221 California Cir, Milpitas, CA 95035) வளாகத்தில் 'சிவா-சக்தி' என்ற இசைநிகழ்ச்சியை வழங்குகிறது. மிருதங்க வித்வான் ஸ்ரீராம் பிரம்மானந்தம் மற்றும் அவரது துணைவியார் சாந்தி ஸ்ரீராம் கர்நாடக சங்கீதத்துக்கென இந்தப் பள்ளியை நடத்தி வருகின்றனர்.

இந்தப் பள்ளியின் மாணவர்கள் 'ஸ்ரீ அன்னமாச்சார்யா' இசைப்போட்டி, க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை போன்றவற்றில் பங்கேற்றுப் பரிசுகளைப் பெற்றுள்ளனர். இவர்கள் பங்கேற்கும் 'சிவா-சக்தி' நிகழ்ச்சியில், சிவன் மற்றும் சக்தி மீதான பாடல்கள் இசைக்கப்படும். சான் ஹோசேயில் உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலின் திருப்பணிகளுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நுழைவுக் கட்டணம் கிடையாது. ரசிகர்கள் மனமுவந்து அளிக்கும் நன்கொடை ஏற்கப்படும்.கலா ஞானசம்பந்தம்,
பாலோ அல்டோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com