உப்பு கருவாடு


கருணாகரன், நந்திதா நாயக, நாயகியாக நடிக்கும் படம் "உப்பு கருவாடு." முக்கிய வேடங்களில் எம்.எஸ். பாஸ்கர், மயில்சாமி, சாம்ஸ், புதுமுகம் ரக்ஷிதா, சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரபல நடன அமைப்பாளர் சதீஷ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுத, பிரபல கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்திற்காக இயக்குநர் கௌதம் மேனன் ஒரு பாடலைப் பாடியுள்ளதாகக் கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து. ரொம்ப உப்பா இருக்காதில்ல!

அரவிந்த்

© TamilOnline.com