காதல் சொல்ல நேரமில்லை


உதய்குமார் நாயகனாக நடிக்கும் படம் காதல் சொல்ல நேரமில்லை. நாயகி, இனியா. கஞ்சா கருப்பு, நடராஜன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். குமார பாண்டியன் இசையமைக்கும் இப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதித் தயாரித்து இயக்குகிறார் ஸ்ரீநிவாசன். "இது ஒரு ஜாலியான கதை. கதாநாயகன் ஒரு பிளேபாய். பார்க்கிற எல்லாப் பெண்களையும் வசப்படுத்திவிட நினைப்பவன். உடன்படாத பெண்களையும் தான் வளைத்து விட்டதாகப் பொய் சொல்வான். பிளேபாய்த்தனம் எப்படி வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதைச் சொல்கிறது படம்" என்கிறார் இயக்குனர்.

அரவிந்த்

© TamilOnline.com