Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
நிருத்யாலயா 25
தமிழ்விளையாட்டு சங்கம்
கெட்டி மேளம்
ஒரு இந்திய சேவை இயக்கம்
- |செப்டம்பர் 2006|
Share:
Click Here Enlargeஅகில இந்திய சேவை இயக்கம் (All India Movement for Seva) 2000-ம் ஆண்டு மக்களுக்கு தொண்டு செய்யும் நோக்கோடு நிறுவப்பட்டது. சம்ஸ்கிரதத்தில் 'சேவா' என்றால் உளமார்ந்த அக்கறை என்று பொருள். இந்த இயக்கத்தின் ஸ்தாபகர் புகழ்பெற்ற மற்றும் எல்லோரது மதிப்பிற்குரிய வேதாந்த குரு ஸ்வாமி தயானந்த சரஸ்வதி ஆவார். இந்த இயக்கத்தின் சேர்மன், இந்திய முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமன் அவர்கள்.

அகில இந்திய சேவை இயக்கம் ஒரு சாதாரண தருமகர்தா சபையோ, தொண்டு நிறுவனமோ (NGO) அல்ல. இது மக்களின் வளர்ச்சிக்கு உதவி செய்து வரும் ஒரு சேவை நிறுவனமாக வளர்ந்து வருகிறது.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த சேவை இயக்கம் செயல்பட்டு வருகிறது, உதாரணமாக, இந்தியாவில் 19 மாநிலங்களில் சத்திரங்கள் (பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு ஹாஸ்டல் வசதி), பால்வாடி எனப்படும் நர்ஸரி பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், நடமாடும் மருத்துவமனைகள், மற்றும் அடிப்படை தண்ணீர், சாலை போன்ற வசதி களை இந்த இயக்கம் ஏற்படுத்தி கொடுத் திருக்கிறது. அத்துடன் நிற்காமல், அந்தந்த மாநிலங்களின் தேவைகளுக்கேற்ப பணம் திரட்டி மேலும் வசதிகள் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் சுமார் 600 மாவட்டங்கள் உள்ளன. இந்த இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்றால் உடனடியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்த பட்சம் ஒரு ஹாஸ்டல் கட்டுவது. இன்றைய தேதியில் 50 ஹாஸ்டல்கள் கட்டப்பட்டு விட்டன, மேலும் கட்டுமான பணி தொடர்கிறது. இந்த ஹாஸ்டல்களின் நோக்கம், இந்தியாவில் ஒரு தேசிய பொறுப்புணர்வை வளர்ப்பதுவேயாகும்.

இந்த இயக்கம் தற்போது 19 இந்திய மாநிலங் களில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இது IRS செக்ஷன் 501(c) 3-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட, வரி விலக்கு அளிக்கப்பட்ட லாபநோக்கி ல்லா நிறுவனம். விவரங்களுக்கு www.aimforseva.org என்ற வலை தளத்தை பார்க்கவும்.

AIM for Seva வழங்கும் நாட்டிய நாடகம், ஆங்கில விரிவுரையுடன், செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது. இப்படைப்பை கண்டு களித்து AIM for Seva இயக்கத்தை ஆதரியுங்கள்.

ஏகாந்த சீதா - a lonely furrow
நடன அமைப்பு: சாந்தா-V.P.தனஞ்சயன்
இசை: T.V. கோபாலகிருஷ்ணன்
தேதி: செப்டம்பர் 24, 2006, ஞாயிறு
இடம்: Ford Community & Performing Arts Center, Dearborn, Michigan.
தயாரிப்பு: க்ளீவ் லேண்ட் கலாசார குழு

விவரங்களுக்கு:
ஸ்ரீநி. V.ராமன் 248.312.7207
உஷா கோபி
More

நிருத்யாலயா 25
தமிழ்விளையாட்டு சங்கம்
கெட்டி மேளம்
Share: 




© Copyright 2020 Tamilonline