Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
FeTNA- ''தமிழர் விழா 2003'' - நியூசெர்சியில்! சூலை 4,5, 6 2003
தமிழ் இணையம் 2003 மாநாட்டு அறிவிப்பு
ஹரி மகேஷின் ''LOVE'' படத்தின் சிறப்புக் காட்சி
- |ஜூலை 2003|
Share:
ஹரி மகேஷ் இயக்கித் தயாரித்திருக்கும் லவ் (Love) திரைப்டம் ஜூலை 13, 2003 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கும் கலி·போர்னியா, ·ப்ரெஸ்னோவிலுள்ள எட்வட்ஸ் திரையங்கில் திரையிடப்படவிருக்கிறது என்று சான் ஓசே, கலி·போர்னியாவின் சமீரா ப்ரொடக்ஷன்ஸ் அறிவித்திருக்கிறது.

லவ் வெறும் காதல் கதை மட்டுமல்ல. கதாநாயகன் ஜாக்கைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் காதல் ஏற்படுத்தும் மறுமலர்ச்சியைப் பற்றிச் சொல்லும் வாழ்க்கைக் கதை. தன் உயிர்க்காதலிக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் போது தான் ஜாக்கின் வாழ்க்கையில் சோதனைக் காலம் தொடங்குகிறது. உடல் ஊனத்தால் மெரீன் படையிலிருந்து விலகி, வேலையும் வீடும் இல்லாமல் தவிக்கும் ஜாக் தன் வாழ்க்கையை உயிர்க் காதலிக்காக அர்ப்பணிக்க முடிவெடுக்கிறான். நிலையற்ற இவ்வுலகில் காதல் நிலைத்திருக்குமா? வாழ்க்கையே பாழாகும் போது காதல் மட்டும் நிலைக்குமா?

சென்னையிலிருந்து 1988ல் அமெரிக்கா வந்த திரு. மகேஷ் தற்போது மனைவி, 2 குழந்தைகளோடு சான்ஹோசேயில் வாழ்கிறார். 1995ல் திரைப்படம் எடுக்க இறங்கிய மஹேஷ் '98ல் 'சமீரா ப்ரொக்ஷன்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கினார். 'லவ்' மகேஷின் இரண்டாவது படம். இவரது முதல் படம் கல்ட் (CULT) 2000-ல் சான் ஹோசேயில் வெளிவந்தது அதே டிசம்பர் மாதத்தில் நியூயார்க் சிறுபட விழாவில் (New York Independent Film and Video Festival) முக்கியமாகப் படமாகத் திரையிடப்பட்டது.

மகேஷின் கதைக்கருவை விரிவாக்கி லவ் படத்துக்குக் கதை வசனம் எழுதியவர் பாலோ ஆல்டோ வசனகர்த்தா ரெபெக்கா சான்டெர்ஸ். எட்டு முழுநீளத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் ரெபெக்கா, மகேஷ¤டன் இணைவது இரண்டாவது முறை. லாஸ் ஏஞ்சல்ஸ் மேட் விக்கின்ஸ் (Matt Wiggins), ·பாஸ்டர் சிடி ·பெர்னாண்டா எள்பின்டோலா (Fernanda Espindola), மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் ஏமி வெரல் (Army Wehrell) ஆகியோர் இந்தப் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மூவருமே மேடையில் பல பாத்திரங்களில் நடித்தவர்கள். புதுமுகங்கள் விகின்ஸ் மற்றும் வெர்லுக்கு இதுதான் முதல் படம். கலைஞர்களைப் பற்றிய கூடுதலான விவரங்களுக்குwww.smeraproductions.com என்ற வலைத்தளத்தைச் சொடுக்குங்கள்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ·ப்ரெஸ்னோவைச் சேர்ந்த ஜான் கெல்லி. இவர் வென்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கது. 1993ல் 'த பூல் பார்ட்டி' (The Pool Party) என்ற குழந்தைகள் வீடியோவுக்குக் கிடைத்த கார்னகீ பதக்கம். மேலும் PBS சேன்னல் ஒளிபரப்பிய இவரது ''Conquest of My Brother'' என்ற அமெரிக்க இந்தியப் பழங்குடியினர் பற்றிய படம் எம்மி விருதுக்கு நியமிக்கப்பட்டது. லவ் படத்தின் படத்தொகுப்பை மகேஷ் மற்றும் ஜாக் கிட்டிங்ஸ் செய்திருக்கிறார்கள்.
திரு. கிட்டிங்ஸ், திரு. மகேஷ¤க்குத் தொழில்நுட்ப மற்றும் திரையொலி ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார்.

திரு. கிட்டிங்ஸின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை ''Spy Who loved me", "The Abyss" மற்றும் ''Splash'' படங்கள். பல கேபிள் தொலைக்காட்சி ச் சேனல்களுக்குப் பல வேறுபட்ட நிகழ்ச்சிகளையும் இவர் தயாரித்திருக்கிறார்.

கலி·போர்னியாவின் செளசில்லா (Chowchillla)வில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படக் கலைஞர்களில் பலர் ·ப்ரெஸ்னோ நகர்ப்புறப் பகுதியைச் சார்ந்தவர்கள். அங்கிருக்கும் மத்திய சிறைச்சாலையும், மெரீன்படைத்தளமும் படத்தின் பின்னணியாக உள்ன. செளசில்லா நகராட்சியும் அதன் மக்களும் படம் எடுக்க மிகுந்த உதவி செய்தனர் என்று நன்றியுடன் நினைவு கூறுகிறார் திரு. மகேஷ். சினிக்வெஸ்ட் 2004 (Cinequest 2004) அல்லது சான்·ப்ரான்சிஸ்கோ சர்வதேசத் திரைப்படவிழா 2004ல் தேர்ந்தெடுக்கப்பட்டால் அங்கே இந்தப் படத்தை வெளியிட மகேஷ் திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள 25 திரைப்பட விழாக்களில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளார். படத்தை விநியோகிக்க விரும்புபவர்கள் திரு. மகேஷை அணுகவும். மேலும் விவரங்களுக்கு : ஹரி மகேஷ் சமீரா ப்ரொடக்ஷன்ஸ், 3240 பெமெரேடோ டிரைவ் சான் ஜோஸ், CA 95135.

பட வெளியீடு : சனிக்கிழமை, ஜூலை 12, 2003, 10 a.m. ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 13, 2003 12 p.m. இடம் : எட்வர்ஸ் திரையரங்கம் 7750, நார்த் பிளாக்ஸ்டோன் அவென்யூ ·ப்ரெஸ்னோ, CA 93720.
More

FeTNA- ''தமிழர் விழா 2003'' - நியூசெர்சியில்! சூலை 4,5, 6 2003
தமிழ் இணையம் 2003 மாநாட்டு அறிவிப்பு
Share: 




© Copyright 2020 Tamilonline