Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | சமயம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ராகமாலிகா - பத்தாம் ஆண்டு நிறைவுவிழா
தென்கலிஃபோர்னியா - தீபாவளிப் பண்டிகை - பல்கலை நிகழ்ச்சி
இலங்கையில் சமாதானம்
திறமைக்கு ஊக்கம் தரும் மன்றம்
வாய் விட்டு சிரி !
சிகாகோ புறநகர்ப் பகுதி - தமிழ்ப்பள்ளி
கிராமப்புற மேம்பாட்டிற்காக கிரிகெட் ஃபார் இந்தியா '02 நிதி திரட்டியது
- |ஜனவரி 2003|
Share:
Click Here Enlargeஅசோஸியேஷன் ஃபார் இந்தியாஸ் டெவெலப் மெண்ட் (A.I.D) அட்லாண்டா கிளையும், அட்லாண்டா கிரிகெட் கிளப்பும் இணைந்து "கிரிகெட் ஃபார் இந்தியா '02" என்ற கிரிகெட் டோர்னமெண்ட்டை அக்டோபர் 27 மற்றும் நவம்பர் 3 ஆகிய இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் நிகழ்த்தின.

இந்தியாவில், குறிப்பாக பிற்பட்ட கிராமப் புறங்களில், கிராம மக்களைச் செயலில் சேர்த்துக் கொண்டு கிராமங்களின் வளர்ச்சிக்கான திட்டங் களுக்கு உதவி செய்யும் A.I.D அட்லாண்டா கிளைக்கு நிதி திரட்ட இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. A.I.D. பற்றிய விரிவான செய்திகளுக்கு www.aidindia.org/atlanta என்ற இணைய தளத்திற்கு விஜயம் செய்யவும்.

இந்த நிகழ்ச்சி எல்லா வகையிலும் வெற்றியாக அமைந்தது. தாமே வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் கூடிய 30 அதிரடி அணிகள் பங்குபெற்றன. வயதோ பாலினமோ இந்தப் போட்டியினைப் பிசுபிசுத்துப்போகச் செய்யவில்லை. ஒவ்வொரு அணியையும் குழந்தைகள், இளைஞர் கள், யுவதிகள், வயதானவர்கள் என்று பாரபட்சமே இன்றி ரசிகர்கள் ஆரவாரித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து ஊக்குவித்தார்கள். 500க்கு மேற்பட்ட பார்வையாளர்கள் இந்தப் போட்டிகளைக் கண்டு களித்தனர். ஆல்ஃபாரிடா நியூ டவுன் பார்க்கில் இது ஒரு இந்தியக் கிரிக்கெட் திருவிழாவாகவே அமைந்தது. பேஸ்பால் மற்றும் கால்பந்து மைதானங்கள் பிரமிப்பூட்டும் கிரிகெட் ஆடுகளங் களாக மாறின. எங்கும் 'அவுஸாட்', 'பாகோ ஜல்தி பாகோ' போன்ற முழக்கங்கள் எதிரொலித்தன. பந்தயம் ஆரம்பிக்கும் முன்னரும், பந்தயத்தின் இடையேயும் அணியினர் ஒன்று கூடி தங்கள் வியூகத்தை வகுத்தனர்.

போட்டியின் நெளிவு சுளிவுகளைக் கையாளுதல், நடுவர்கள் முதல் ஸ்கோர் பண்ணுதல் வரை எல்லாம் சுமூகமாகக் கையாளப்பட்டன. அட்லாண்டா கிரிகெட் கிளப்பைச் சேர்ந்த நந்து, கணேஷ் மற்றும் குழுவினர் தங்களது அனுபவத்தால் இதனைத் திறமையாக நடத்திக் காட்டினர். A.I.D வாலண்டியர்கள் அலுவலகப் பணிகளில் இவர்களுக்கு உதவிப் புரிந்தனர்.

பலரும் தங்களது தனித்தன்மையான கிரிக்கெட் திறமைகளை நிரூபித்தது நிகழ்ச்சி அமைப்பாளர் களை விருதுகளுக்கு வீரர்களைத் தேர்வு செய்வதில் சிக்கலை ஏற்படுத்தியது. ஜிம்மி படேல் (பிளேயர் ஆஃப் தி டோர்னமெண்ட்), அனுபவ் ஜெயின் (சிறந்த மட்டையாளர்), சாத் சையத் (சிறந்த பந்து வீச்சாளர்) மற்றும் அனீஃப் குட்டி (சிறந்த ஃபீல்டர்) மற்ற திறமைசாலிகளை விட ஜாம்பவான்களாகத் திகழ்ந்து விருதுகளைத் தட்டிச்சென்றனர். மெட்றாஸ் சரவண பவன் அணிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
சச்சின் அணியும் க்ரிஃபின் அணியும் முறையே தங்களது அரை இறுதி ஆட்டங்களில் வெற்றிப் பெற்று இறுதி ஆட்டத்தில் மோதின. க்ரிஃபின் அணி சச்சின் அணியை விறுவிறுப்பான ஆட்டத்தில் வீழ்த்தி போட்டியை வென்றது. அடுத்த ஆண்டும் வெல்வோம் என்று கூறிச் சென்றுள்ளனர் இந்த அணியினர்.

இந்தப் போட்டியின் மூலம் திரட்டப்பட்ட நிதி ஹண்ட்ரட் ப்ளாக் திட்டம் (Hundred Block Plan - HBP) என்ற திட்டத்திற்குப் பயன்பட உள்ளது. அடிப்படை சுகாதாரம் மற்றும் உடல் நலம், கல்வி, வேளாண்மை, சிறு சேமிப்புத் திட்டங்கள் மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆகியவற்றை உள்ளடக் கியது HBP. இந்தியக் கிராமப்புறங்களிலிருந்து 100 ப்ளாக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த திட்டம் ஏழு ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். 50லிருந்து 60 கிராமங்களைக் கொண்டது ஒரு ப்ளாக். ஒரு கிராமத்திற்கு ஒரு வருடத்திற்கு ஆகும் திட்டச் செலவு $120. பணம் பெற்றுக் கொள்ளாமல் தொண்டு செய்யும் கிராம மக்களை இத்திட்டம் பெரிதும் நம்பியுள்ளது.

தமிழகம் மற்றும் பீகாரில் 40 ப்ளாக்குகளை A.I.D ஆதரித்து வருகிறது. இந்த நீண்ட கால ஒத்துழைப்புக்கு பலவகைகளிலும் நிதி திரட்டி வருகிறது.

தெற்காசிய மக்களுக்கான அட்லாண்டா பகுதியில் இயங்கும் ஒரு ஷாப்பிங் மாலான க்ளோபல் மால் இந்த கிரிக்கெட் போட்டியை ஸ்பான்ஸர் செய்தனர். உணவுத் தேவைகளை ருசி ரெஸ்டாரண்ட் கவனித்துக் கொண்டது.
More

ராகமாலிகா - பத்தாம் ஆண்டு நிறைவுவிழா
தென்கலிஃபோர்னியா - தீபாவளிப் பண்டிகை - பல்கலை நிகழ்ச்சி
இலங்கையில் சமாதானம்
திறமைக்கு ஊக்கம் தரும் மன்றம்
வாய் விட்டு சிரி !
சிகாகோ புறநகர்ப் பகுதி - தமிழ்ப்பள்ளி
Share: 




© Copyright 2020 Tamilonline