Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | யார் இவர்? | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
சுத்த சக்தியின் சங்கடம் (பாகம்- 10)
- கதிரவன் எழில்மன்னன்|மே 2008|
Share:
Click Here EnlargeSilicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யாவின் துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு உதவியை நாடவே, முழு நேரத்துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்போர்டு மருத்துவ மனையில் மருத்துவராகவும் உடலியல்மருத்துவ ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

ஷாலினியின் தந்தை முரளியின் நண்பர் மார்க் ஷெல்ட்டன்,தன் சுத்த சக்தித் தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப் பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாக கூறவே சூர்யாவின் திறமையை நன்கு அறிந்திருந்த முரளி, அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறி அறிமுகம் செய்ய அழைத்துவந்தார். மார்க், எத்தனால், பயோடீஸல், இயற்கை வாயு, கரித்திரவம் போன்ற பல சுத்த சக்தி நுட்பங்களைப் பற்றி பற்றி விளக்கிவிட்டு, வற்றை விட சூர்ய சக்திதான் சிறந்தது என்று கூறினார். சூர்ய சக்தியிலும் வெப்ப சக்திற்றும் ஒளி மின்சக்தி என்று இரண்டு வகை இருப்பதாகவும், வெர்டியான் புரட்சிகரமான சூர்ய ஒளி மின்சக்தி நுட்பத்தையும் உற்பத்தியாகும் மின்சக்தியை சேமிக்கப் யன்படும் உயர்தர பேட்டரி நுட்பத்தையும் உருவாக்கியிருப்பதாகவும் கூறினார். பிறகு...

சூர்ய சக்தி நுட்பத்தில் பலர் குதித்துள்ளதாகவும், அது செலவதிகம் ஆனால் உற்பத்தியாகும் சக்தி குறைவு என்று கேள்விப்பட்டதாகக் கிரண் கூறவும், அப்படிப் பட்ட தற்போதையப் பிரச்சனைகளைத் தீர்க்கவே வெர்டியான் புரட்சிகரமான ஒரு நுட்பத்தை உருவாக்கியிருப்பதாகக் கூறிய மார்க் ஷெல்ட்டன், தங்களின் நுட்பத்தைப் பற்றி மிகுந்த பெருமிதத்துடன் மேற்கொண்டு விளக்கினார்.

தன் ஆராய்ச்சிக் கூடத்தை ஒருமுறை பெருமையுடன் பார்த்து விட்டு, மார்க் விவரிக்கலானார். 'கிரண், நீ சொன்னபடி சூர்ய ஒளி மின்சக்தித் து¨றயில் தற்போது பல குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை எங்கள் நுட்பம் எவ்வாறு தீர்த்து புரட்சி ஏற்படுத்தப் போகிறது என்று புரிய

வேண்டுமானால் ஒளி மின்சக்தி எப்படி வேலை செய்கிறது என்று முதலில் புரிய வேண்டும். ஒளி மின்சக்தி, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது.'

அவர் தொடரும் முன், கிரண் தாவிக் குதித்தான்! 'ஐன்ஸ்டைனா? E equal to mC squared! ரொம்பவே ·பேமஸ் ஆச்சே. நான் கூட ஸ்கூல் படிக்கறச்சே டீ ஷர்ட் மேல போட்டுக்கிட்டு என் தலையைப் பரட்டையா வச்சுகிட்டு ஐன்ஸடைன் மாதிரி உலா வந்திருக்கேனே' என்றான்.

கிரணின் ஐன்ஸ்டைன் தோற்றம் மீண்டும் தன் நினைவுத்துக்கு வரவே உரக்கச் சிரித்த முரளி குழப்பத்துடன், 'ஆனா, ரிலேடிவிடிக்கும் சூர்ய மின்சக்திக்கும் என்ன சம்பந்தம், புரியலையே' என்றார்.

மார்க் புன்னகையுடன் விளக்கினார். 'நிறையப் பேர் ஐன்ஸ்டைன் பெயர் சொன்னவுடனேயே ரிலேடிவிடி மட்டுந் தான்னு நினைக்கறாங்க. ஆனா ஐன்ஸ்டைனுக்கு நோபெல் பரிசு கிடைச்சது ரிலேடி விடிக்காக இல்லை. அவர் ஒளி மின்சக்தியைப் பத்திக் கண்டுபிடிச்ச விஷயங்களுக்குத்தான்.

கிரண் சொன்ன, மிகப் பிரபலமான E=mC-squared ஈக்வேஷனும் ரிலேடிவிடி பத்தினதில்லை. ஒளிச் சக்தி ·போட்டான் எனப்படும் துகள்போன்ற

சக்தி பேக்கட்டு களால ஆனது. ஒரு ·போட்டான்ல இருக்கற சக்தி என்னங்கறது பத்தினதுதான்.'

கிரண் வியப்புடன் தலையாட்டினான். 'μ! எனக்குத் தெரிஞ்சிருக்கவே இல்லை. ஐன்ஸ்டைன் நான் நினைச்சதைவிடப் பெரிய கில்லாடிதான் போலிருக்கு!'

மார்க் புன்னகைத்தார். 'ஐன்ஸ்டைனுடைய ஒளிக் கோட்பாடுகள் இப்ப நாம பயன்படுத்தற நிறைய விஷயங்களுக்கு அடிப்படை. உதாரணமா, லேஸர் கூட அதை வச்சுக் கண்டுபிடிக்கப் பட்டதுதான். ஐன்ஸ்டைன் அதைக் கண்டுபிடிக்காட்டாலும், அதுக்கு அடித்தளம் போட்டது அவர்தான்னு சொல்லலாம்.'

சூர்யா மீண்டும் விஷயத்துக்கு வந்தார். 'சரி, அந்த ஒளி மின்சக்திக் கோட்பாடுகள் வெர்டியானின் நுட்பத்துக்கு எப்படி சம்பந்தப்படுது?"

மார்க், ஐன்ஸ்டன் பிரதாபத்திலிருந்து தன்னை ஒருமுறை உலுக்கியபடி விடுவித்துக் கொண்டு, தொடர்ந்து விளக்கினார்.

'சூர்ய ஒளி ·போட்டோ வோல்ட்டேயிக் பேனல்கள் மேல விழறப்போ அதிலிருந்து மின்சாரம் வெளியாகுது. ஆனா, இந்தப் பேனல்கள், வளைஞ்சு குடுக்கறா மாதிரி யில்லாததுனால, கூரைகள் மேல மட்டுமே வைக்கக் கூடியதா இருக்கு. கிரண் சொன்னா மாதிரி, அடுக்குமாடிக் கட்டிடங்களில் கூரையின் பரப்பு குறைவா இருக்கறதனால, தமக்குத் தேவையான சக்தியை உற்பத்தி பண்ண முடியாது. இந்தக் குறைபாட்டைத் தீர்க்கணும்னா எந்த மாதிரிப் பரப்பின் மேலயும், படர்த்தி அதிலிருந்து ஒளி மின்சக்தி தயாரிக்கற மாதிரியான நுட்பம் தேவை.'

சூர்யா இடைமறித்தார். 'ரைட். ஆனா அந்த மாதிரி நுட்பங்களும் வந்திருக்கு போலிருக்கே? என் பழைய உற்பத்தித் தொழில் மூலமா எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் அதைப்பத்தி ஒரு பார்ட்டில சொல்லிக்கிட்டிருந்தாரே?'

மார்க் ஆமோதித்தார். 'இருக்கு, அது சரிதான். ஆனா அதுல ஒரு பிரச்சனை. கூரை மேல வைக்கக் கூடிய வளையாத பேனல் மூலப் பொருட்கள் ஒரு சதுரப்பரப்பில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விட, இப்போது பொதுவாகக் கிடைக்கக் கூடிய வளைகிற பேனல் பொருட்கள் மிகக் குறைவான அளவுக்குத்தான் மின்சக்தி தருது.'

முரளி சிரித்தார். 'இது எங்க ஊர்ல சொல்றா மாதிரி, கல்லைக் கண்டா நாயைக் காணோம், நாயைக் கண்டாக் கல்லைக் காணோங்கற திரியில்ல இருக்கு?'

மார்க்கும் சிரித்துவிட்டுத் தொடர்ந்தார். 'அது நல்ல பழமொழிதான். அதுக்குப் பல ஆழமான, ஆத்மார்த்தமான அர்த்தங்கள் உண்டுன்னு நானும் ள்விப்பட்டிருக்கேன். ஆனா ரெண்டு விஷயங்கள் சேர்ந்து அனுகூலமாக் கிடைக்கறது கஷ்டங்கற மேலான அர்த்தம் இந்த விஷயத்துக்கு நல்லாவே பொருந்துது. ஆனா கல், நாய் ரெண்டையும் சேர்த்துப் பாக்க முடியறதுதான் வெர்டியானின் நுட்பம்! பல வடிவங்களில வளைச்சு எங்க வேணுமானாலும் சூர்ய மின்சக்தி உற்பத்தி செய்யப் பயன்படுத்தக் கூடிய, ஆனால் வளையாத பேனல்கள் அளவுக்கு, ஏன் அதைவிட சமபரப்பளவு விகிதத்துல அதிகமாகவே மின்சக்தி தரக் கூடிய ஒரு விதமான ப்ளாஸ்டிக் பொருளை எங்க விஞ்ஞானிகள் கண்டு பிடிச்சிருக்காங்க.

அந்தப் பொருளை உடனடியாக பயன்படுத்தக் கூடிய பல வடிவங்களில் பெருமளவில் உற்பத்தி செய்ய, எங்கப் பொறியியலாளர் களும் வழிமுறைகளை அமைச்சிருக்காங்க.'

கிரண் குதூகலித்தான். 'வாவ்! கேட்கவே பரபரப்பா இருக்கு. எப்படி அது? கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்...'

அந்தக் குதூகலத்தால் மனமகிழ்ந்த மார்க் மேற்கொண்டு விவரிக்கலானார். 'ரொம்ப மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயந்தான் கிரண். அந்த மாதிரியான பொருளைக் கண்டுபிடித்ததும் வழிமுறைகளைப் பக்குவப் படுத்தினதும் மிக சாமர்த்தியமுள்ள பலரின் நெடுநாளான கடும் முயற்சியின் பலன். எங்க பொருள் மாதிரிக் கண்டு பிடிக்கப் பலர் முயற்சி செஞ்சிக்கிட்டிருக்காங்க.

உதாரணமா காப்பர் இண்டியம் கேலியம் ஸெலனைட் (CIGS) என்ற நாலு மூலப் பொருளையும் சேர்த்து ஸிலிகானுக்குப் பதிலாப் பயன்படுத்தி வளைகிற ஸோலார்பேனலா செய்யறாங்க. ஸிலிகானை விட ஒரு வாட் மின்சக்திக்கு குறைச்சலான விலையாகுது. ஆனா ஒரு யூனிட் பரப்புக்கு உற்பத்தியாகற மின்சக்தி ரொம்பக் குறைவு. அதை அதிகரிக்கத் தீவிர முயற்சி நடக்குது. ஆனா முன்னேற்றம்னு பார்த்தா ரொம்ப மெல்ல நகருதுன்னுதான் சொல்லணும்.'

கிரண் நக்கலாக, 'ஸோலார் பவர்ட்நத்தைன்னு சொல்லலாமோ' என்றான்.
மார்க் சிரித்துவிட்டுத் தொடர்ந்தார். 'சமீப காலத்துல வேக் ·பாரெஸ்ட் (Wake Forest) பல்கலைக் கழகத்துலயும், நியூ மெக்ஸிகோ மாநிலப் பல்கலைக் கழகத்துலயும் நேனோ நுட்பத்தோட நடக்கற ஆராய்ச்சிகளில் முன்னைவிடச் சிறிதளவு அதிக மின்சக்தி உற்பத்தி செய்யற மாதிரியான பொருட்களைக் கண்டு பிடிச்சிருக்காங்க. பக்கத்துல, இங்க ஸிலிகான் வேல்லியிலயே, CIGS-க்கு பதிலா ஸிலிகான் துகள்களை வச்சு குறைஞ்ச விலையில மெல்லிய ஸிலிகான் பேனல் களைத் தயாரிக்கும் நிறுவனமும் ஒண்ணு இருக்கு. இதெல்லாம் தொழில்ரீதி உற்பத்திக்கு வர இன்னும் நிறைய வருடங்களாகும். ஆனா, எங்க விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள்ளேயே அதிக மின்சக்தி தரக்கூடிய, ஆனா வேணுமான எந்த வடிவிலும் வளையக் கூடிய சூர்ய மின்சக்திப் பேனல்களை வணிக ரீதியாக விற்கற நிலைக்குக் கொண்டு வந்திருக்காங்க.'

கிரண் துள்ளினான். 'பிரமாதம். உங்க நுட்பம் எப்படி வித்தியாசமானது? எப்படி உங்களால மட்டும் அப்படி சீக்கிரமே வணிக ரீதிக்குக் கொண்டு வர முடியுது?'

மார்க் விளக்கினார், 'எங்க நுட்பம் வினோதமானது. முன்னெல்லாம் திரையில ப்ரொஜெக்ட் பண்றத்துக்கு பயன்படுத்தப் பட்ட ட்ரேன்ஸ்பேரன்ஸிகள் எனப்படும் ப்ளாஸ்டிக் ஸ்லைட் ஷீட்கள் மேலயே, தானே சர்க்யூட் உருவாக்கறா மாதிரி...'

கிரண் குழம்பினான். 'திரை மேல ப்ரொஜெக்ட் பண்ண ப்ளாஸ்டிக் ஸ்லைட் வேணுமா. என்னது அது? ஏன் கம்ப்யூட்டரை வச்சுக் காட்டினாப் போதாதா?'

சூர்யா அடக்க முடியாமல் சிரித்து விட்டார். 'தலைமுறை இடைவெளின்னா இதுதான். கிரண், உங்க தலைமுறை பயன் படுத்தாத பழைய விஷயம் அது. ஸ்லைட் ரூல் போய் கேல்குலேட்டர்கள் வந்தா மாதிரின்னு வச்சுக்கயேன்' என்றார்.

மார்க்கும் கலகலவெனச் சிரித்துவிட்டுத் தொடர்ந்தார். 'சரிதான். விஷயத்துக்கு வருவோம். எங்க நுட்பம் மத்தவங்க மாதிரி ப்ளாஸ்டிக் மேல அச்சடிக்கறது, அதிவெப்பம் அதெல்லாம் கிடையாது. வெப்பம் அதிக மானா ப்ளாஸ்டிக் உருகிடுமே. அதுனால, நிறைய மின்சக்தி தரக்கூடிய பல்வேறு மாதிரியான துகள்களும், கண்ணுக்கே தெரியாத அளவுக்குச் சிறிய ரெஸிஸ்டர்கள், கபாஸிடர்கள் போன்ற மின்சாதனங்களும் ஆல்கஹாலில் கலந்த திரவமாக்கப்பட்டு...'

கிரண் துள்ளி எழுந்து இடைமறித்தான், 'ஆஹா, ஆல்கஹால் திரவமா! கொண்டாட்டந் தான் போங்க.'

சூர்யா உரக்கச் சிரித்துவிட்டு எச்சரித்தார். 'ஒயின், விஸ்கி, மார்கரீட்டா மாதிரி கிடையாது கிரண். இண்டஸ்ட்ரியல் ஆல்கஹால். குடிச்சா குடல் அம்பேல். ஜாக்கிரதை! பக்கத்துலயே போகாதே.'

மார்க்கும் சிரிப்புடன் தலையாட்டி ஆமோதித்து விட்டுத் தொடர்ந்தார். 'அப்ஸொல்யூட்லி ரைட். இந்த ஆல்கஹால் திரவம், ஒரு அடிப் ப்ளாஸ்டிக் ஷீட் மேல வேணுமான வடிவத்துல μட்டைகள் வெட்டப் பட்ட இன்னொரு ப்ளாஸ்டிக் ஷீட்டை மாஸ்க்கா வச்சு அது மேல கொட்டப்படுது.'

அந்த நுட்பத்தை அவர் மேற்கொண்டு விவரித்தது அதி வியப்புத் தருவதாக இருந்தது.

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline