Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நிதி அறிவோம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | இலக்கியம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
இயந்திரமயமான பிரபஞ்சமும் அதற்கு அப்பாலும்
அனு நடராஜனுக்கே வாக்களியுங்கள்
- |அக்டோபர் 2006|
Share:
Click Here Enlargeஃப்ரீமாண்ட் நகரின் நகராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கான நவம்பர் தேர்தலில், அப்பதவியை இப்பொழுது வகிப்பவரும் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானவருமான அனு நடராஜன் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்களித்து நம் ஏகோபித்த ஆதரவை அவருக்கு அளிப்போம்.

ஃப்ரீமாண்ட் நகரின் முதல் இந்திய நகராட்சி மன்ற உறுப்பினர், மற்றும் ஒரே பெண் உறுப்பினர் என்னும் தகுதிக்குச் சொந்தக் காரரான அனு நடராஜனைப் பாரதி சந்தித் திருந்தால் மிகப் பெருமை கொண்டிருப்பான். வளைகுடாப் பகுதியின் நான்காவது பெரிய நகரமான ஃப்ரீமாண்ட்டை நிர்வகிக்கும் குழு உறுப்பினரான (City Councilor) மிக முக்கியப் பொறுப்பை 2004ம் ஆண்டில் பதினேழு விண்ணப்பதாரர்களின் கடும் போட்டிக் கிடையே அனு வென்றார்.

மதுரையில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த அனு, இந்திய பெண்கள் அணித் தலைவரான சாந்தா ரங்கஸ்வாமியுடன் கிளப் நிலை கிரிக்கெட் ஆடியவர். இன்று, கிரிக்கெட்டுடன் பேஸ்பாலையும் ரசிப்பவர். பெங்களூரில் வளர்ந்தாலும், தாய், தந்தையர் வீட்டில் தமிழில் பேசுவதைக் கட்டாய மாக்கினர். பெங்களூரில் கட்டிடக் கலையில் தேர்ச்சி பெற்ற அனு, சுற்றுலாத் தலங்கள், மருத்துவமனைகள், மற்றும் பள்ளிக்கூடங்கள் பலவற்றின் கட்டிடத் திட்டங்களை மேற் கொண்டவர். வீடு மற்றும் நகர வளர்ச்சிக் கழகத்தின் பல திட்டங்களிலும் பங்கேற்றார். சியாட்டிலில் நகர திட்டவியல், நகர வடிவமைப்பியல் (Urban Planning, Urban Design) இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1995ல் ஃப்ரீமாண்ட் நகர நிர்வாகத்தில் சேர்ந்து தன்னார்வச் செயலாற்றினார். பின்பு, சான்ஃபிரான் ஸிஸ்கோ கென்கே கட்டமைப்பு நிறுவனத்தில் சேர்ந்து 2003ம் வரை பல திட்டங்களில் பணியாற்றினார். கயோட்டி பள்ளத்தாக்கு, வலேஹோ, மில்பீட்டஸ், ரெட்வுட் சிடி நகர டெளண்டவுன் அமைப்புகளில் அனு அவர்களின் கலை வண்ணத்தைக் காணலாம். 2002ல் குடிமக்கள் திட்டக் குழுவிற்கு (Citizens Planning Commission) நியமிக்கப் பெற்றார்.

பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான அனு நடராஜன் அவர்களை இவ்வருடம் வெளிநாட்டு இந்தியர்களின் அமைப்பான என்.ஆர்.ஐ. இன்ஸ்டிட்யூட் (NRI Institute) 'பாரத் சம்மான்' விருது வழங்கிக் கெளரவித்தது.

முப்பரிமாண நகர வடிவமைப்பில் சிறந்து விளங்கும் அனு அவர்களின் கல்வியும் அனுபவமும், நகர நிர்வாகத்திற்கும், பொதுத் துறை ஈடுபாட்டிற்கும் இயல்பான உந்துதலாய் அமைந்து விட்டன. அவரைப் பொறுப்பில் அமர்த்தியபோது ஃப்ரீமாண்ட்டின் நகரத் தந்தை பாப் வாசர்மேன் (Mayor Bob Wasserman), 'அனு அவர்கள் திட்டக் குழுவில் மிகச் சிறந்து செயலாற்றியதை நானறிவேன். இப் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் அனுவே மிக்க தகுதியுள்ளவர். அவரது பின்னணிக்கும் அனுபவத்திற்குமே முன்னிலை தந்திருக்கிறோம். அவரின் செயல்பாட்டால், நகர மன்றத்திற்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பார் என்பதில் ஐயமில்லை' என்று கூறியுள்ளார்.
நகர நிர்வாக மன்றத்திற்கான அனு அவர்களின் குறிக்கோள்...

ஃப்ரீமாண்ட்டை மேம்படுத்தி, அதைப் படுக்கையறை சமூகத்தினின்று (bedroom community) வளைகுடாவின் தன்னிறைவு பெற்ற முதன்மை நகரங்களில் ஒன்றாக உருவாக்குவதே ஆகும். இக் கனவை நினைவாக்கப் பல்வேறு திட்டங்களை நகரக் குழுமத்துடன் உருவாக்கக் கடும் உழைப்பை யும் துவங்கி விட்டார். 43% ஆசிய இனத்தவர் வாழும் ஃப்ரீமாண்ட்டை வெளியுலகுக்கு விளம்பரப்படுத்துவதில் முனைப்பாயிருக்கிறார். ஃப்ரீமாண்ட்டின் நடுவ வருமானமான $107,000, அமெரிக்க சராசரி வருமானத்தை விட அதிகம். மக்கள் தொகையோ, 210,000; நகரப் பரப்பு, 92 சதுரமைல். ஃப்ரீமாண்ட் நகரம், பள்ளித் தரத்திலும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் உயரிய நிலையில் உள்ளது. இவ்வளவு இருந்தும், இங்கிருப் போர் வளைகுடாவின் மற்ற நகரங்களில் வருடத்திற்கு 1.1 பில்லியன் டாலர் செலவிடுகின்றனர். ஏனென்றால், இங்கு விதவிதமான கடைகளில் பொருள் வாங்கும் மகிழ்ச்சியான அனுபவம் அமைவதில்லை. உயர்தர வர்த்தக மையங்கள் இல்லாதது நகருக்குப் பெருத்த நட்டமே. ஐந்து சிறு நகரங்களின் கூட்டால் உருவாகிய ஃப்ரீமாண்ட்டில் டெளண்டவுன் இல்லாததும் குறையே. பார்ட் (BART) ரயில் நிலையம் அருகே டெளண்டவுனை உருவாக்குவதற் கான திட்டங்கள் வகுக்கப் பெற்று விட்டன, கட்டுமானப் பணிகள் தொடங்க இருக்கின்றன. மேலும், ஏற்கனவே இருக்கும் டயோட்டா தொழிற்சாலை போன்ற பெரிய நிறுவனங்களை ஈர்க்கும் பணியும் தொடங்கி விட்டது. நமக்கெல்லாம் இனிப்பான ஒரு செய்தி, ஃப்ரீமாண்ட்டில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் லட்சியத் திட்டமும் அனுவின் பட்டியலில் அடங்கும்.

இங்கிருந்து கல்லூரி படிப்புக்காக வெளியே செல்லும் இளைய தலைமுறையினரை, "திரும்பி வாருங்கள், நாம் சேர்ந்து செயலாற்றலாம், மாற்றம் உண்டாக்கலாம்" என்றழைக்கிறார் அனு.

அனுவின் உதாரண மனிதரான கிரண் பேடிக்கும் அவருக்கும் பல ஒற்றுமைகள். இருவரும், கற்பனை வளம் நிறைந்தவர்கள். அவர்கள் தம் கற்பனைத் திறத்தைச் செவ்வனே பயன்படுத்தி, தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வில் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தியுள்ளனர். வேலைப் பணி என்பது, கடமையல்ல, முழு மனதுடன் ஈடுபடும் ஒரு தவம் என்று இருவருமே கருதுபவர். அனுவின் இயல்பான துணிவையும், கற்பனா சக்தியையும், நன்நோக்கையும் அவரின் பணியிலும் கண்டு பயன்பெற்றுள்ள நாம், வரும் நவம்பரில் எல்லோரும் ஒரு மனதாக அவருக்கு வாக்களித்து மேலும் பயன் பெறுவோமாக.
More

இயந்திரமயமான பிரபஞ்சமும் அதற்கு அப்பாலும்
Share: 




© Copyright 2020 Tamilonline