Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
நடராஜ் வைரவன்
- செய்திக்குறிப்பிலிருந்து, மீனாட்சி கணபதி|அக்டோபர் 2016|
Share:
இது நம்மவர்கள் சமையல் போட்டிகளில் கைவரிசையைக் காட்டும் சீசன்போலும். சென்ற இதழில் Chopped நிகழ்வில் வென்ற ஆர்த்தி சம்பத்துடன் உரையாடினோம். தற்போது நடராஜ் வைரவன். 13 வயதான நளராஜ் - சாரி, நடராஜ் - மன்ஹாட்டன், நியூ யார்க்கில் ஃபிப்ரவரி 22ம் தேதி நடைபெற்ற 'Chopped Junior' போட்டிகளில் பங்கேற்றார். கலிஃபோர்னியாவின் ஃப்ரீமான்டைச் சேர்ந்த இவர், 'ஹார்னர் ஜூனியர் ஹை' பள்ளி மாணவர். இப்போட்டியில் இவரோடு ஜூலியட் (அரிசோனா), மிக்காய்லா (மிசிசிப்பி), நிக்கோலஸ் (ஆன் ஆர்பர், மிச்சிகன்) ஆகியோர் போட்டியிட்டனர்.

நண்பருடன் 'Cutthroat Kitchen' நிகழ்ச்சியைப் பார்த்தாராம். "அவர் சொல்லாவிட்டால் நிகழ்ச்சியைப்பற்றி அறிந்திருக்கவே மாட்டேன். நிகழ்ச்சியைப் பார்க்கப் பார்க்க என் ஆர்வம் அதிகரித்தது. நானே சமைக்கத் தொடங்கினேன்" என்கிறார் நடராஜ். போட்டியில் அவர் தயாரித்த உணவு விவரம்: Smoked chicken breast salad with pickled onion crostini. Entree: Goat steaks, green grape animals, turnips, and finally snap pea crisps; goat curry over steamed jasmine rice and fried turnips. Dessert: Mini apple pie with soft serve cheddar cheese ice cream.
"இப்போட்டியில் நிக்கோலஸ் வெற்றிபெற்றார். வெற்றிபெறக் கடினமாக உழைத்தேன். போட்டி கடுமையாக இருந்தது. ஆனாலும் பங்கேற்றதில் மகிழ்ச்சி என்றுதான் சொல்வேன். போட்டியில் நிறையக் கற்றுக்கொண்டேன். மீண்டும் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தால் நேரம், உணவின் அளவு, அதை அலங்காரமாக வழங்குவது இவற்றில் அதிகக் கவனம் செலுத்துவேன். இத்துறையில் முன்னேற இந்தத் திறமைகளை வளர்த்துக்கொவது முக்கியம்" என்கிறார் நடராஜ்.

இவரது பெற்றோர்களும் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஒருமுறை அம்மா இவரிடம் வீட்டுப்பாடம் செய்வதை நிறுத்திவிட்டு சமைத்துப்பழகச் சொல்லியிருக்கிறார். பயிற்சிக்காக, கடந்த 'Chopped' போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டு புதிய உணவு வகைகளைத் தயாரித்துப் பார்த்திருக்கிறார்.



"போட்டியில் பிரமிக்கவைக்கும் ஒன்றைச் சமைக்கவேண்டும். அதேசமயம் நமக்குக் கிடைக்கும் மூலப்பொருட்களை வித்தியாசமாக, புதியமுறையில் உபயோகிக்க வேண்டும். உதாரணமாக சூப் புதுமைகள்செய்ய இடந்தரும். நான்கே பொருட்களைக் கொண்டு ஒரு ஆச்சரியமான சூப் செய்துவிடலாம்" என்பது இவர் இப்போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவோருக்குத் தரும் பயனுள்ள தகவல்.

தமிழில்: மீனாட்சி கணபதி
Share: 




© Copyright 2020 Tamilonline