Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2010
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
விசிட்டர் ஆற்றுப்படை!
சரணாலயம்
- உதயகுமார் J.R.|ஏப்ரல் 2010||(1 Comment)
Share:

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



மயிலுக்கு மலைகளில் சரணாலயம் - சின்னக்
குருவிக்கு மரங்களில் சரணாலயம்
மானுக்கு வனங்களில் சரணாலயம் - இந்த
மனதுக்கு எவ்விடம் சரணாலயம்?

தவழ்கின்ற பருவத்தில் யாருக்குமே
தாய்மடி ஒன்றுதான் சரணாலயம்!
விளையாடும் தருணத்தில் யாராகிலும்
கேளிக்கை ஒன்றே சரணாலயம்!

நேசிக்கும் நேரத்தில் நெஞ்சினுக்கே
நெருங்கிய இதயங்கள் சரணாலயம்!
அலைபாயும் நெஞ்சுக்கு இடமில்லையே
அதற்கென ஏதொரு சரணாலயம்?

துடிக்கின்ற நெஞ்சுக்கு இரவுதன்னில்
துயிலென்ற நல்லதோர் சரணாலயம்!
அழுகின்ற நேரத்தில் துன்பம் வெல்ல
ஆறுதல் தருமிடம் சரணாலயம்!

புகழ்கொள்ளும் பொழுதினில் நெஞ்சத்திற்கு
புவிசூழ்ந்த வானமே சரணாலயம்!
கணத்திற்கு கணம்மாறும் உள்ளத்திற்கே
கண்டதுண்டோ யாரும் சரணாலயம்!
உதயகுமார் JR,
கலி.
More

விசிட்டர் ஆற்றுப்படை!
Share: 




© Copyright 2020 Tamilonline