Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
பாலைவனத்து இளநீர்
நல்ல மனம்
நீங்கள் எப்படி?
- ராஜ்|நவம்பர் 2009|
Share:
Click Here Enlarge'சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்றது'

எனக்கு அப்பொழுது ஏழெட்டு வயதிருக்கும். உறவினர் திருமணம். முகூர்த்தம் முடிந்து சாப்பாட்டுக்கு இலையும் போட்டாகி விட்டது. அம்மா கை பிடித்து மனித ரயில் போல் கூட்டத்துடன் நகர்ந்து கொண்டிருந்தேன் சாப்பாட்டு அறையை நோக்கி.

நாற்காலியில் அமர்ந்தாலும், கால்களால் தரையைத் தொடமுடியாத வயது. சுற்றுமுற்றும் வெறித்துப் பார்த்த வண்ணம், சற்றுமுன் கழுவிய கைகளில் இருந்த தண்ணீர் கொண்டு, அழுக்குப் படிந்த மேசையில் கோலம் போட்டுக்கொண்டிருந்தேன். "அம்மா!" என்று நான் அலறும்படி என் முதுகில் அம்மா ஒரு கை பதித்தாள். "கைய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டே" என்று அதட்டினாள். என் கண்கள் அவமானத்தின் சின்னமாகக் கண்ணீர் வடித்தன.

சாப்பாட்டுக்காக அடித்துப் பிடித்து, இடம் பிடிக்கும் மனிதர்களுடன் எனது முதல் சந்திப்பு அங்கேதான்.

இலையும் போட்டார்கள். கடைசியாய் அமர்ந்திருந்த எனக்கு மட்டும், "பழுத்த" மஞ்சள் இலை. முகம் சுளித்தேன். அம்மாவின் அதட்டல் பார்வைக்கு ஆளானேன். "இந்தா என் இலை எடுத்துக்கொள்" என்று அம்மா தன் இலையை நீட்டினாள். முனகிக் கொண்டே, "வேண்டாம் போ, எனக்கு இதுதான் வேணும்" என்று பொய் சொல்லி, என் உடைந்த மனதை ஒட்டவைத்துக் கொண்டேன். பழுத்த இலையின் நிறத்தை மனதில் பச்சையாக மாற்றிக்கொண்டேன்.

"மிச்சம் வைக்காம சாப்பிட்டியா?" என்ற அவள் கேள்விக்கு, நான் பதில் சொல்லி முடிப்பதற்குள், எங்கிருந்தோ சித்தப்பா "கொஞ்சம் மிச்சம் வச்சிட்டான், ஆனா அவனத் திட்டாதீங்க" என்றார்.
சாப்பாடு பரிமாறுகையில், என் இலையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். என் மனதில் ஒரே ஒரு பயம்--உருளைக்கிழங்குப் பொறியலை நான் குழந்தை என்பதால் கொஞ்சமாக வைத்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான். அதைப் பற்றியே யோசித்துக் கொண்டு, நிமிடத்துக்கு ஒருமுறை என் தற்காலிக எதிரியின் (அம்மா) இலையையும் நோட்டமிட்டுக் கொண்டேன், யாருக்கு அதிகம் என்று கண்களாலேயே அளந்துகொண்டேன்.

உருளைக்கிழங்கு பொறியலும் வந்தது, அம்மா, "போதும். போதும். மிச்சம் வச்சிருவான்" என்று சொல்லச் சொல்ல, பரிமாறிய சித்தப்பா, "சாப்பிடட்டும், நல்லா சாப்பிட்டாத் தானே நல்லா வளருவான்" என்று என் கன்னம் கிள்ளினார்.

எனக்கு "வெற்றி! வெற்றி!" என்று கத்தத் தோன்றியது. ஆனாலும், என் முதுகில் அம்மா பதித்த விரல்கள் நினைவுக்கு வந்தன. அமைதியாக, மனதில் உரக்கச் சிரித்துக்கொண்டேன். எனக்குள் இருந்த மிருகம் விழித்து கொண்டது. "பழுத்த இலை" எனக்குத் தந்த எல்லோரையும் பழிவாங்கும் வகையில், சுற்றி உள்ள அற்ப மனிதர்கள் செய்த தவறைச் சுட்டிக்காட்ட, என் இலையைக் காலிசெய்ய முடிவு செய்தேன்.

இதை எப்படியோ உணர்ந்த அம்மா. "நீ சாப்பிட்டது போதும். போ, கையக் கழுவு" என்றாள் அதிகாரமாக.

"எனக்குப் பசிக்குது. நான் எல்லாத்தையும் சாப்பிட்டிட்டு தான் வருவேன்" என்றேன்.

அம்மா கையை ஓங்குவதற்கு முன், பரிமாறிய சித்தப்பா என்னைக் காப்பாற்றினார். "நீ பொறுமையா சாப்பிடுப்பா, நான் இருக்கிறேன்" என்றார்.

புது உற்சாகத்துடன் சாப்பிட்டுக் காண்பித்தேன் - அம்மாவை நம்ப வைக்க. "எதையும் மிச்சம் வைக்காம சாப்பிடணும்" என்று அறிவுரை தந்து சென்றாள் அம்மா.

பரிமாறிய சித்தப்பாவும், ஓரிரு நிமிடம் பொறுத்துப் பார்த்தார். நான் முடித்தபாடில்லை, "முதல் வரிசையில் சாம்பார்" என்ற குரல் கேட்டு சித்தப்பா காணாமல் போனார். ஒரு வாய் சோற்றுக்கு ஒரு குவளை தண்ணீர் குடித்து வயிறு நிரம்பியது, சாப்பாட்டை இலையில் இருந்து வாய்க்கு கொண்டு செல்லக் கூட கைகள் மறுத்தன, ஆனால் இலையில் மலைபோல் சாப்பாடு.

எனக்கு மிச்சம் வைத்ததை எண்ணிப் பயமில்லை, மிச்சம் வைத்தது, என் அம்மாவுக்குத் தெரிந்தால், எனக்கு விழப்போகும் அடியை எண்ணி மட்டுமே எனது அச்சம். நான் செய்த பிழையை யாரும் பார்க்காமல் மறைக்க, என் இலையை மின்னல் வேகத்தில் மூடிவிட்டு ஓடத் தொடங்கினேன்.

"என்னப்பா சாப்பிட்டு முடிச்சிட்டியா?" என்ற சித்தப்பாவின் குரல் கேட்டு, வேகத்தை அதிகரித்தேன், காவலரை கண்ட திருடன் போல.

தலையாட்டியபடியே கையைக் கழுவினேன், நான் செய்த தவறையும் சேர்த்து, பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தது போல் ஒரு உணர்வு. வெளியில் காத்திருந்த அம்மா கையைப் பற்றினேன். தொலைந்த யானைக் கன்று, தாயிடம் வந்து தும்பிக்கையைப் பற்றிக்கொள்வது போல.

"மிச்சம் வைக்காம சாப்பிட்டியா?" என்ற அவள் கேள்விக்கு, நான் பதில் சொல்லி முடிப்பதற்குள், எங்கிருந்தோ சித்தப்பா "கொஞ்சம் மிச்சம் வச்சிட்டான், ஆனா அவனத் திட்டாதீங்க" என்றார்.

என்னக்கு என் நெருங்கிய எதிர்காலம் பற்றிய கவலையும், என்னை குற்றவாளியாக ஆக்கிய சித்தப்பா மேல் கோபமும் படரத் தொடங்கியது, அம்மாவின் முகத்தை பார்க்காமல், கீழே கிடந்த வெற்றிலைக் காம்புகளை சேர்ப்பது போல் நடிக்கத் தொடங்கினேன்.
Click Here Enlargeஎல்லாம் அறிந்த அம்மா, "வீட்டுக்கு வா" என்று தன் தலையை பலமாக ஆட்டினாள். அம்மாவின் பலமான தலை அசைவுக்கு எப்பொழுதும் ஒரே அர்த்தம்தான் - திட்டு, அடி, உதை.

ஆனால் வீட்டுக்குச் சென்றவுடன், யாருக்கும் தெரியாமல், தனிமையில்...

இப்போதைக்கு எப்படியோ தப்பித்தேன் என்ற சந்தோஷத்துடன், கல்யாண மண்டபதிற்கு வெளியே ஓடினேன்.

"பார்த்துடா!" என்றாள் அம்மா அக்கறையுடன்.

என்னதான் சொன்னலும் அம்மா அம்மாதான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

மண்டபதிற்கு வேளியே நான்கைந்து வீடுகள் தள்ளி, ஒரு கூட்டம் காத்துக் கிடந்தது - பெரிய குப்பைத் தொட்டியின் அருகில். குப்பை அள்ளுபவர்களை தனித்தனியே பார்த்திருக்கிறேன். ஆனால் இத்தனை பேரை ஒருசேர இதற்குமுன் பார்த்ததில்லை. கூட்டத்தில் என்னைப் போல் சிறுவரும், என் அம்மா போல் அம்மாக்களும், வயதான தாத்தாக்களும், இரண்டு நாய்க்குட்டிகளும் எதையோ எதிர்பார்த்துக் கல்யாண மண்டபத்தையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தன.

அன்றிலிருந்து இன்றுவரை, பொது விழாக்களில் மிச்சம் வைத்து விட்டுத்தான் வருகிறேன், "பழுத்த" தாத்தாவிற்காக! நீங்கள் எப்படி?
சித்தப்பா "வழி, வழி" சொல்லி சாப்பாட்டு இலைகளைக் கூடையில் அள்ளிக்கொண்டு, குப்பைத் தொட்டியை நோக்கி நடக்கலானார்.

மழை வருகையை எதிர்பார்த்திருந்த மயில்கள் போல், கூட்டத்தில் இருந்த எல்லா (நாய்க்குட்டிகளையும் சேர்த்து) முகத்திலும் புன்னகை.

இதை ரசித்துப் பார்த்த எனக்கு, மேலும் ஒரு அதிர்ச்சி. இந்த கூடையில்தான் என் "பழுத்த" இலையும் இருந்தது. அம்மா பார்த்திருக்கக்கூடாது என்று எண்ணித் திரும்பிய பொழுது இன்னொரு அதிர்ச்சி, அம்மாவின் கண்களும் நான் சாப்பிட்ட "பழுத்த" இலை மேல்தான்!

சித்தப்பா இலையைக் குப்பைத்தொட்டியில் கொட்டியவுடன், கூட்டம், உயிர் பெற்றது.

சாப்பாட்டுக்காக மண்டபத்தினுள் நான் பார்த்த அடிதடிக் காட்சி இப்போது வெட்டவெளியில் அரங்கேற ஆரம்பித்தது.

என் "பழுத்த" இலை மீதே எனது கவனமும், என் அம்மாவின் கவனமும்.

என் "பழுத்த" இலை தன்னைப் போன்றே இருந்த ஒரு தாத்தா கையில் சிக்கியது. அதனைப் பிரித்து பார்த்த தாத்தா வாய்நிறையப் புன்னகையுடன் "இந்த இலையில சாப்பிட்டவரு நல்லா இருக்கணும்" என்று கூறி, நான் மிச்சம் வைத்த சாப்பாட்டை எடுத்து உண்ண ஆரம்பித்தார்.

எனக்கு என்மேலே ஒரு தனி மரியாதை பிறந்தது. என் அம்மாவின் உணர்ச்சியை அறிந்துகொள்ளத் திரும்பினேன்.

முதல்முறை, என் தாயின் கண்களில் கண்ணீரைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "வாடா செல்லம்! போகலாம்" என்றாள்.

அன்றிலிருந்து இன்றுவரை, பொது விழாக்களில் மிச்சம் வைத்து விட்டுத்தான் வருகிறேன், "பழுத்த" தாத்தாவிற்காக!

நீங்கள் எப்படி?

ராஜ்,
நியூஜெர்ஸி
More

பாலைவனத்து இளநீர்
நல்ல மனம்
Share: 




© Copyright 2020 Tamilonline