Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
அஞ்சலி
ராஜமார்த்தாண்டன்
மைக்கேல் ஜாக்ஸன்
கமலா சுரையா
- |ஜூலை 2009|
Share:
Click Here Enlargeசாகித்ய அகாதமி விருது உட்படப் பல்வேறு விருதுகள் பெற்ற ஆங்கில, மலையாள எழுத்தாளர் கமலா சுரையா என்ற கமலா தாஸ் (75) புனேயில் காலமானார். 1934ல், கேரள மாநிலத்தின் மலபாரிலுள்ள புன்னையூர்க்குளத்தில் பிறந்த கமலா தாஸ் 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாள இலக்கியத்தில் எழுதிவந்தார். தமது 65-வது வயதில் இஸ்லாத்துக்கு மாறி 'கமலா சுரையா' என்று பெயரை மாற்றிக் கொண்டார்.

ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் நல்ல பல கவிதைகளைப் படைத்திருக்கும் கமலா, சர்ச்சைக்குரிய எண்ணற்ற பல சிறுகதைகளையும் படைத்துள்ளார். இவர் எழுதிய 'Summer in Culcutta', 'The Descendents', 'The Old Playhouse and Other Poems' போன்ற கவிதைத் தொகுப்புகள் மிகவும் புகழ் பெற்றவை. 'The Sirens' என்ற கவிதைத் தொகுப்பு சாஹித்ய அகாதமி விருதோடு ஆசியக் கவிதை விருதினையும் பெற்றது. பாலுறவு குறித்த விஷயங்களை தம்முடைய படைப்புகளில் மூடாக்கின்றி எழுதிப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டவர் கமலா. 'என்ட கதா' என்ற தலைப்பில் மலையாளத்தில் எழுதிய சுயசரிதையில் பெண்களுக்கு எதிராக ஆணாகதிக்கச் சமூகம் செய்யும் துரோகத்தையும், தமது திருமண உறவில் ஏற்பட்டிருந்த கசப்புகளையும் விரிவாகப் பதிவு செய்திருந்தார். அந்நூல் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுப் பிரபலமானது.
கேரள நவீனப் புனைகதை இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் கமலா சுரையாவுக்குத் தென்றல் தனது அஞ்சலிகளைச் செலுத்துகிறது.
More

ராஜமார்த்தாண்டன்
மைக்கேல் ஜாக்ஸன்
Share: 




© Copyright 2020 Tamilonline