Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
ஆகஸ்ட் 3 விரிகுடாப்பகுதி தமிழ் மன்றம் வழங்கும் முத்தமிழ் விழாவில் சாலமன் பாப்பையா
செம்டம்பர் 13: கே.ஜே. ஏசுதாஸ் Live in Concert
- பாகிரதி சேஷப்பன்|ஆகஸ்டு 2003|
Share:
ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு மொழிகளில் பாடல்களை வழங்கி யவரும், அமெரிக்கா, ருஷ்யா உட்படப் பல நாடுகளில் நிகழ்ச்சிகள் வழங்கியிருப் பவருமாகிய பத்மபூஷண் டாக்டர் கே. ஜே. ஏசுதாஸ் அவர்கள் சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றத்தின் சார்பில் இசைநிகழ்ச்சி வழங்க இருக்கிறார். இந்நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் 13ம் தேதி, Chabot College அரங்கில் நடை பெற இருக்கிறது. நிகழ்ச்சி சங்கரா கண் ·பவுண்டேஷனுக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.

இசையை இறை அருளாகவும், குடும்பச் சொத்தாகவும் அடைந்த ஏசுதாஸ் பற்றி இரசிகர்களுக்காக சில தகவல்கள்:

ஜனவரி 10, 1940ல் கேரளாவைச் சேர்ந்த கொச்சினில் பிறந்தார். அவர் தந்தையார் அகஸ்டைன் ஜோசப் ஒரு புகழ் பெற்ற மேடைப் பாடகராகவும், நடிகராகவும் இருந்தார். ஏசுதாஸ் தந்தையிடம் சிறு வயது முதல் இசை பயின்று வந்தார்.

பிற்காலத்தில் கொச்சினில் உள்ள ஆர்.எல்.வி. இசைப்பள்ளியிலும் சேர்ந்து பயின்றார். பத்மபூஷண் விருதைக் குடியரசுத் தலைவரிடம் பெற்ற அதே ஆண்டில் சிறந்த பின்னணிப் பாடகர் விருதும் இவருக்குக் கிடைத்தது. அவர் தொடர்ந்து நான்காண்டுகள் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை தட்டிச்சென்றதும் ஒரு சாதனை. கேரளவில் சங்கீத நாடக அகாதமியின் தலைவராக 1970ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்தப் பதவியை மிகவும் இளம்வயதிலேயே அடைந்த முதல் கலைஞர் இவரே!

1980ல் தொடங்கியது முதல் தமிழ்ச் சமுதாயத்திற்குப் பணியாற்றி வரும் விரிகுடாப் பகுதித் தமிழ்மன்றம் சென்ற ஆண்டுகளில் உதவும் கரங்கள், தமிழ் இணைய மாநாடு நடத்திய உத்தமம் போன்ற அமைப்புக்களுக்கு நிதி திரட்டிக் கொடுத்துள்ளது.

'தேங்க்ஸ் கிவிங்' சமயத்தில் வீடற்ற எளியோர் பாதுகாப்பு நிலையத்திற்குச் சென்று அங்கிருப் போருக்கு உணவு வழங்கியது. இந்த முறை நிதி பெறுவது கண்ணொளி வழங்குவதில் பிரசித்திபெற்ற Sankara Eye Foundation. மேலும் தெரிந்து கொள்ள: www.giftofvision.org.

தமிழ்மன்றம் மேலும் தமிழ் இலக்கியத்திற்கும், மொழி வல்லுனர்களுக்கும் ஆதரவளித்து வருகிறது. கம்பன் விழா, பாரதி விழா, தேவநேயப் பாவாணர் தினம் ஆகியற்றை நடத்தியது. பேரா. மறைமலை, மதுரபாரதி, ஆதிரை, குமரி அனந்தன், மதிவாணன் போன்ற தமிழ்ச் சான்றோருக்கு விரிகுடாப்பகுதியில் மேடை அமைத்துக் கொடுத்தது.

'பாஞ்சாலி சபதம்' என்ற முழு நீளக் கவிதை நாடகத்தை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தது. 'அக்கினிக் குஞ்சு' என்ற பெயரில் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்கி அரங்கேற்றியது. பெர்க்லி பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பீடம் அமைத்ததிலும் தமிழ் மன்றத்திற்குப் பெரும் பங்குண்டு. சமீபத்தில் நடந்த 'தனிமை' நாடகத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

நாடகம், குழந்தைகள் நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி, முத்தமிழ் விழா, பிக்னிக் என்று பலவிதமான மக்களையும் ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இது தவிர, மாதம் ஒரு முறை 'சிரிப்போ சிரிப்பு' நேரம் இலவசமாக வழங்கப் படுகிறது. மேலும், மலர் அலங்காரம், கொலுப் போட்டி, 'கரயோக்கி' இசைநிகழ்ச்சி, 'பாட்டுக்குப் பாட்டு' போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தித் தமிழ்மன்றம் பல்வகைத் திறமைகளுக்கு அரங்கமைக்கிறது.

விரிகுடாப்பகுதியில் உள்ள மற்ற தமிழர் பண்பாடு, இலக்கிய, கல்வி நோக்குள்ள அமைப்புக்களுடனும் சேர்ந்து தமிழ்மன்றம் இயங்கி வருகிறது.

What:
Padmabhushan Dr. K.J. Yesudas Live in Concert

Presented by:
Bay Area Tamil Manram to benefit Sankara Eye Foundation (www.giftofvision.org)

When:
Saturday, September 13, 2003 at 5:00 P.M.

Where:
Chabot College Auditorium, 25555 Hesperian Blvd. Hayward. CA 94545

Admission:
$20, $30, $50, $100
Contact:
Sivasubramaniyaraja 510-894-7659, Roopa / Gopal 408-243-3564. tickets@bayareatamilmanram.org

Sold online at www.sulekha.com/bayarea
Tickets purchased online receives $2 discount per order. Tamil Manram members receive 10% discount off ticket price. Limitations apply.

Visit www.bayareatamilmanram.org for details.

ஏசுதாஸின் தேன்குரலைக் கேட்டு ரசிப்பதுடன் கண்ணொளி வழங்கும் புனிதப் பணிக்கு உதவவும் இது ஒரு அரிய வாய்ப்பு. தவறவிடாதீர்.

பாகீரதி சேஷப்பன்
More

ஆகஸ்ட் 3 விரிகுடாப்பகுதி தமிழ் மன்றம் வழங்கும் முத்தமிழ் விழாவில் சாலமன் பாப்பையா
Share: 




© Copyright 2020 Tamilonline