Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர்கடிதம் | முன்னோடி
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மந்திரமும் வரங்களும் சாபங்களும்
- ஹரி கிருஷ்ணன்|ஏப்ரல் 2021|
Share:
பாரதத்தில் குண்டலாஹரணம் என்றறியப்படும் இந்த பர்வத்தின் பெயர்க் காரணத்திலிருந்து தொடங்குவோம். ஹரணம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு, 'திருடுதல், கவர்தல், எடுத்துக்கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல பொருள்கள் உண்டு. எனவேதான் திரெளபதி, ஜயத்ரதனால் கவர்ந்து செல்லப்பட்ட பர்வம் 'த்ரெளபதீஹரண பர்வம்' என்றழைக்கப்படுகிறது. கர்ணனுடைய குண்டலங்களை இந்திரன் கவர்ந்துகொண்ட பர்வம் என்பதால் இது குண்டலாஹரண பர்வம் என்றழைக்கப்படுகிறது.

கர்ணனிடத்திலிருந்து இந்திரன் அவனுடைய கவச குண்டலங்களைப் பெற்றான் என்றாலும் கவசத்தைவிட குண்டலமே சிறப்பிக்கப்பட்டு, 'கவசாஹரண பர்வம்' என்றோ, 'கவச குண்டலாஹரண பர்வம்' என்றோ அழைக்கப்படாமல் 'குண்டலாஹரண பர்வம்' என்றே அழைக்கப்படுகிறது. ஏனென்றால், குந்திபோஜன் உத்தரவின் பேரில் துர்வாசருக்குப் பணிவிடை செய்த குந்தி, அவர் உபதேசித்த மந்திரத்தை விளையாட்டாக சூரியனை நோக்கி உச்சரித்துவிட, மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட சூரியன் அவளிடத்தில் ஒரு புத்திரனை உண்டாக்குவேன் என்று நேரில் வந்துவிடுகிறான். பயந்துபோன குந்தி, 'பெற்றோருக்குக் கட்டுப்பட்ட நான் இதற்குச் சம்மதிக்க மாட்டேன். அறியாச் சிறுமி 'ஆர்வத்தின் தூண்டுதலால்' (out of curiosity) தவறு செய்துவிட்டாள் என்று நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்' என்று எவ்வளவோ மன்றாடியும், மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட தன்னால் அவளிடத்தில் ஒரு புத்திரனை உண்டாக்காமல் திரும்பிச் செல்லமுடியாது என்று சூரியனும் தன் இயலாமையைத் தெரிவித்து, 'என்னுடன் கூடியபிறகு உன் கன்னிமை மீண்டும் திரும்பும்' என்று அவளைச் சமாதானம் செய்தபோது, வேறுவழியில்லாமல் சூரியனுக்கு உடன்பட்ட குந்தி, தனக்கு உண்டாகும் மகன் அமிர்தத்தால் செய்யப்பட்ட கவச குண்டலங்களோடு பிறக்கவேண்டும்' என்று கேட்டுக்கொண்டதன் பேரில் கர்ணன் கவச குண்டலங்களோடு தோன்றினான்.

மிக விரிவான இந்த இடத்தைச் சுருக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் இந்தப் பகுதியின் சாரம் இதுதான். கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு 'துர்வாசர்' என்ற பெயரைத் தவிர்க்கிறது. 'ஒரு பிராமணர்' என்றே குறிக்கிறது. BORI பதிப்பு துர்வாசர் என்ற பெயரைத் தவிர்த்து, 'ஒரு பிராமணர்' என்ற பெயரால் குறித்திருந்தாலும், அடிக்குறிப்புகளில் 'இது துர்வாசரைக் குறிப்பது' என்று சொல்கிறது. தென்னிந்தியப் பதிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பான கும்பகோணம் பதிப்பில் வந்தவர் துர்வாசர் என்பது தெளிவாகவும் வெளிப்படையாகவும் குறிக்கப்பட்டிருக்கிறது.

குந்திபோஜனுடைய அரண்மணையில் தங்க வந்த துர்வாசர் பலவிதமான சோதனைகளுக்கும் கோபமான வார்த்தைகளுக்கும் பிறகு, குந்தியின் உபசரிப்பில் மகிழ்ந்துபோய், 'உனக்கு வேண்டிய வரங்களைத் தருவேன், கேள்' என்றார். 'எனக்கு வரம் எதுவும் தேவையில்லை என்று மறுத்தாள் குந்தி. அப்படியானால், தேவர்களை அழைப்பதற்கான மந்திரத்தை உபதேசிக்கிறேன், பெற்றுக்கொள் என்று அவர் வற்புறுத்தவே, இரண்டாம் முறையும் மறுத்தால் அவர் தன்னைச் சபித்துவிடுவார் என்று அஞ்சி அந்த மந்திரத்தைப் பெற்றுக்கொள்கிறாள். பிற்காலத்தில் பாண்டுவுக்கு கிந்தம ரிஷியால் நேரப்போகும் சாபத்துக்கு மாற்றாக இது குந்திக்கு உபதேசிக்கப்பட்டது என்று நாம் அனுமானித்துக்கொள்ள முடிகிறது. வியாச பாரதம் பின்வருமாறு சொல்கிறது: "கல்யாணி! சுத்தமான புன்னகையுள்ளவளே! என்னிடத்தினின்று வரத்தை நீ விரும்பாவிட்டால், நீ தேவர்களை அழைப்பதற்காக இந்த மந்திரத்தைப் பெற்றுக்கொள். கல்யாணி! நீ இந்த மந்திரத்தினால் எந்தத் தேவனை ஆவாஹனம் செய்வாயோ அந்தத் தேவன் உன் வசத்திலிருக்க வேண்டியவனாவான். விருப்பமில்லாதவனோ விருப்பமுள்ளவனோ அந்தத் தேவன் மந்திரத்தினால் பரபரப்புள்ளவனாகவும் வாக்கியங்களால் வேலைக்காரன்போல வணங்கினவனாகவும் உன்னுடைய வசத்தில் வந்து சேருவான் என்று சொன்னார். அரசரே! இகழப்படாத அந்தக் குந்தியானவள் சாப பயத்தினால் அப்பொழுது அந்தப் பிராம்மண ஸ்ரேஷ்டரை இரண்டாவது தடவை மறுத்துச் சொல்வதற்குச் சக்தியற்றவளானாள்." (வனபர்வம், குண்டலாஹரணபர்வம் அத். 366, பக். 1131)

இந்தப் பகுதியை கிஸாரி மோஹன் கங்கூலி பின்வருமாறு மொழிபெயர்க்கிறார்: 'O gentle maid, I have been well-pleased with thy attentions, O beautiful girl! Do thou, O blessed girl, ask even for such boons as are difficult of being obtained by men in this world, and obtaining which, thou mayst surpass in fame all the women in this world'. At these words of his, Kunti said, 'Everything hath already been done in my behalf since thou, O chief of those that are versed in the Vedas, and my father also, have been pleased with me! As regards the boons, I consider them as already obtained by me, O Brahmana!' The Brahmana thereupon said, 'If, O gentle maid, thou dost not, O thou of sweet smiles, wish to obtain boons from me, do thou then take this mantra from me for invoking the celestials! Any one amongst the celestials whom thou mayst invoke by uttering this mantra, will appear before thee and be under thy power. Willing or not, by virtue of this mantra, that deity in gentle guise, and assuming the obedient attitude of slave, will become subject to thy power!'"

Vaisampayana continued, "Thus addressed, that faultless maiden could-not, O king, from fear of a curse, refuse tor the second time compliance with the wishes of that best of the twice-born ones" (கிஸாரி மோஹன் கங்கூலி மொழிபெயர்ப்பு அத்தியாயம் 303) இந்த மந்திரங்கள் அதர்வசிரஸில் சொல்லப்பட்டுள்ளன என்று கும்பகோணம் பதிப்பும் Then, O king, that Brahmana imparted unto that girl of faultless limbs those mantras which are recited in the beginning of the Atharvan Veda. என்று கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பும் சொல்கின்றன.
இப்படி வற்புறுத்தலின் பேரில் மந்திரோபதேசம் செய்யப்பட்ட குந்திக்கு, இந்த மந்திரங்கள் இன்ன தன்மையன என்று சொல்லப்பட்டனவா என்பதை மொழிபெயர்ப்புகளிலிருந்து அனுமானிக்க முடியவில்லை. 'இந்த மந்திரம் தேவர்களை அழைப்பதற்கானது. எந்தத் தேவனை நீ அழைத்தாலும், அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உனக்கு அவன் கட்டுப்பட்டிருப்பான்' என்பனபோன்ற பூடகமான சொற்களால் பேசப்பட்டுள்ள இந்தப் பகுதியை வைத்து, 'இந்த மந்திரங்களின் பலனாக வருகின்ற தேவன், தன்னிடத்தில் ஒரு புத்திரனை உண்டாக்குவான்' என்பது தெரிந்திருந்ததா என்பதை அனுமானிக்க முடியவில்லை. இருந்தபோதிலும், அது தெரியாததனால்தான் அவள் இந்த மந்திரத்தைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பினாள்' என்பது அடுத்த அத்தியாயத்திலேயே தெளிவாகச் சொல்லப்படுகிறது.

துர்வாசர் குந்திபோஜனுடைய அரண்மணையில் ஒருவருட காலம் தங்கியிருந்தார். அதன் இறுதியில் குந்திக்கு மந்திரங்களை உபதேசித்துவிட்டுப் புறப்பட்டார். அவர் சென்ற சில காலத்துக்குப் பிறகு குந்திக்கு 'இந்த மந்திரங்கள் எத்தகையவை' என்று சோதித்துப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் அவளுக்கு மாதவிலக்கு முடிந்து, 'ருது' எனப்படும் கர்ப்பம் தரிக்கின்ற காலம் வந்திருந்தது. உப்பரிகையில் இருந்த குந்தி, உதயமாகின்ற சூரியனைப் பார்த்தாள். 'சரி, சூரியனை அழைத்து இந்த மந்திரத்தின் வலிமையைப் பரிசோதிப்போம்' என்று நினைத்துக்கொண்டாள்.

கும்பகோணம் பதிப்பு சொல்கிறது: "அந்தப் பிராம்மணோத்தமர் சென்று சிறிதுகாலம் சென்றபின், கன்னியாக இருந்த அந்தக் குந்தியானவள் 'மகாத்மாவான அவரால் எனக்குக் கொடுக்கப்பட்ட இந்த மந்திரத் தொகுதி எப்படிப்பட்டது? அதனுடைய வலிமையை விரைவில் அறிவேன்' என்று மந்திரத் தொகுதியின் பலாபலங்களை விரைவில் அறிவேன்' என்று மந்திரத் தொகுதியின் பலாபலங்களைச் சிந்தித்தாள். இவ்வண்ணம் ஆலோசிக்கின்ற அந்த ப்ருதையானவள் தற்செயலாக ருதுவின் சின்னத்தைக் கண்டாள். கன்னியாக இருக்கும் நிலைமையில் வீட்டுக்கு விலக்கான அந்தச் சிறுமியானவள் வெட்கினவளானாள். பிறகு, உப்பரிகையிலிருப்பவளும், சிறந்த படுக்கையிலிருந்தவளுமான அந்தக் குந்தியானவள், கீழ்த்திசையில் உதிக்கின்ற சூரிய மண்டலத்தைப் பார்த்தாள். அழகிய இடையுள்ள அந்தக் குந்தியானவள், அந்த ஸூர்யனிடத்தில் மனத்தையும் கண்ணையும் வைத்தாள். அவள் ஸந்தியை அடைந்திருக்கிற சூரியனுடைய ரூபத்தினால் (போதுமென்கிற) திருப்தியை அடையவில்லை. அவளுக்குத் திவ்ய திருஷ்டி உண்டாயிற்று. அவள் அற்புதமான காட்சியுள்ளவனும் கவசமணிந்தவனும் குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டனுமான ஒரு தேவனைக் கண்டாள். அரசரே! மந்திரத்தைப் பற்றி அவளுக்கு(ப் பரீக்ஷிக்க) விருப்பம் உண்டாயிற்று. பிறகு, அவள் அந்த ஸூர்யனை மந்திரத்தினால் அழைத்தாள்." இங்கே பிராணாயாமத்தால் அழைத்தாள் என்ற குறிப்பும் வருகிறது. (வனபர்வம், குண்டலாஹரணபர்வம், அத். 307, பக். 1132)

இந்தப் பகுதியை கிஸாரி மோஹன் கங்கூலி பின்வருமாறு மொழிபெயர்க்கிறார்: Vaisampayana said, "When that foremost of Brahmanas had gone away on some other errand, the maiden began to ponder over the virtue of those mantras. And she said to herself, 'Of what nature are those mantras that have been bestowed on me by that high-souled one? I shall without delay test their power'. And as she was thinking in this way, she suddenly perceived indications of the approach of her season. And her season having arrived, while she was yet unmarried, she blushed in shame. And it came to pass that as she was seated in her chamber on a rich bed, she beheld the solar orb rising in the east. And both the mind and the eyes of that maiden of excellent waist became rivetted fast upon the solar orb. And she gazed and gazed on that orb without being satiated with the beauty of the morning Sun. And she suddenly became gifted with celestial sight. And then she beheld that god of divine form accoutred in mail and adorned with ear-rings. And at sight of the god, O lord of men, she became curious as to the (potency of the) mantras. And thereupon that maiden resolved to invoke him. And having recourse to Pranayama, she invoked the Maker of day.

சூரியன் அவளுக்கு முன்னே தோன்றியபோது அது மாலைப்போது. '(ஸந்தியை அடைந்திருக்கிற சூரியனுடைய ரூபம்' என்ற தமிழ் மொழிபெயர்ப்பின் குறிப்பை கவனிக்கவும்.) இவன் சூரியன்தான் என்று உணர முடியாத ஒரு தேவன், கவச குண்டலங்களை அணிந்தவாறு அவள் முன்னே தோன்றினான். அப்போதுதான் அவளுக்கு மந்திரத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் விருப்பம் உண்டானது. சூரியனை மந்திரத்தால் அழைத்தாள். அந்த மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட சூரியன் அவளிடத்தில் பிள்ளையை உண்டுபண்ண எண்ணினான். மந்திரத்தின் பலத்தை உணர்ந்தக் குந்தி அஞ்சினாள். மறுத்தாள். மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு வந்திருக்கிற என்னை மறுக்கலாகாது. அப்படி மறுத்தாயானால், நான் திரும்பிப் போய்விடுவேன். ஆனால், உன்னுடைய பெற்றோர்களையும் உனக்கு இந்த மந்திரத்தை உபதேசித்த ரிஷியையும் சபிப்பேன்' என்றான் சூரியன். போரி பதிப்பில் பிபேக் தேப்ராயின் மொழிபெயர்ப்பில் இந்தப் பகுதியைப் பார்ப்போம்:

“O fortunate one! I have appeared here because I am under your control, thanks to the strength of the mantra. O queen! Now that I am under your control, what do you wish me to do? I will do whatever you ask me to.” Kunti replied, “O illustrious one! Return to the place you arrived from. O illustrious one! I summoned you out of curiosity. Please be gracious.” 'The sun said, “O slender-waisted one! I will go as you have asked me to. But having invoked a god, it is not proper to send him away in vain. O extremely fortunate one! Your desire is to have a son through Surya. He will be unrivalled in this world in valour and he will wear armour and earrings. O one whose gait is like that of an elephant! Give yourself to me. O beautiful one! I will beget a son, like the one that you desire. O fortunate one! O sweet-smiling one! I will depart after having united with you. Else, I will leave in anger and will curse that brahmana and your father. There is no doubt that I will consume them because of what you have done. Though he does not know about this offence, your father is stupid. That brahmana gave you this mantra without knowing about your character and conduct and I will impose extreme humility on him.

Bibek Debroy. The Mahabharata (p. 575). Penguin Books Ltd. Kindle Edition.

இந்தச் சூழ்நிலையில்தான் குந்தி, சூரியனுக்கு சம்மதித்துக் கருவுற்றாள். ஆனால், 'இவன் சூரியன்' என்று உணர்ந்த கணத்துக்கு முன்னாலேயே அவன் அணிந்திருந்த கவச குண்டலங்களை கவனித்திருந்தாள்.

"குந்தி, 'தேவரே! பகவானே! நீர் என்னிடத்தில் உண்டாக்கும் என்னுடைய புத்திரனுக்கு அம்ருதத்தினின்று உண்டான இந்தக் குண்டலங்களும் உத்தமமான கவசமும் இருக்குமேயானால், சொன்னவண்ணம் உம்மோடு எனக்குச் சேர்க்கை உண்டாகட்டும். அந்தப் புத்திரன் உம்முடைய வீர்யமும் ரூபமும் பலமும் சௌர்யமும் உள்ளவனாகவும் தர்மத்துடன் கூடியவனாகவும் உண்டாகட்டும்' என்று வேண்டினாள்." அதன்படியே, சூர்யன் தன் தாயான அதிதி தனக்குத் தந்த குண்டலங்களையும், தான் அணிந்திருக்கும் கவசத்தையும் அளிப்பேன்' என்று உறுதியளித்தான். இப்படித்தான் கர்ணன், கவச-குண்டலங்களோடு தோன்றினான். கஸ்யபரின் மனைவியான அதிதிக்குப் பிறந்ததால்தான் சூரியனுக்கு ஆதித்யன் என்ற பெயர்.

தோன்றும்போதே கவசத்துடன் தோன்றிய இன்னொருவன் உண்டு. அவன் நெருப்பிலிருந்து தோன்றியவன். பாஞ்சாலியின் சகோதரனான திருஷ்டத்யும்னன். பாஞ்சாலியோடு வேள்வித் தீயிலிருந்து தோன்றியவன். அந்தக் கதையைப் பிறகு பார்க்கலாம். இப்போது குந்தி கருவுற்றது, கர்ணனைப் பெற்றது, அவனை சூரியன் சொன்னபடி அஸ்வநதியில் விட்டது, அப்படி நதியில் விடுவதற்கு முன்னால் நதியில் மிதக்கும் பெட்டியில் இட்ட குழந்தைக்குப் பாதுகாப்பாக இருப்பதற்காக முன்னேற்பாடுகளைச் செய்தது, அந்தக் குழந்தைக்குக் குந்தி செய்த ஆசிர்வாதங்கள், குழந்தையுடன் கூடிய அந்தப் பேழை அஸ்வநதியிலிருந்து யமுனைக்கும் பின்னர் கங்கைக்கும் மாறி, அங்க தேசத்தை அடைந்தது போன்ற விவரங்களை ஒற்றர்களின் மூலமாக அறிந்தது போன்ற விவரங்களைப் பார்க்கலாம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline