Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | முன்னோடி | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
வெடிக்கும் வார்த்தைகளை புஸ்வாணமாக....
- சித்ரா வைத்தீஸ்வரன்|செப்டம்பர் 2017|
Share:
அன்புள்ள சிநேகிதியே,

கோபத்தை எப்படி அடக்கிக்கொள்வது? எனக்கும் என் கணவருக்கும் எப்போதும் போராட்டம். கல்யாணம் ஆன புதிதில் நான் மிகவும் சாதுவான, கூச்சமுள்ள பிராணியாகத்தான் இருந்தேன். ஆனால், அவர் குடும்பத்தில் எல்லாரும் விஸ்வாமித்திரர்கள். கணவர், மாமனார், மைத்துனர் என்று எல்லாரும் எதற்கெடுத்தாலும் எகிறுவார்கள். என் மாமியார், "இந்தக் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து இந்தக் கோபம். நான் அனுசரித்து இருந்துவிட்டேன். நீயும் கற்றுக்கொள்" என்று பிராக்டிகலாக இருந்துவிட்டார். சிலசமயம் சண்டையில் கலந்துகொள்வார். சிலசமயம் அந்த இடத்தைவிட்டுப் போய்விடுவார். அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வந்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன், ஒரு காரணத்திற்காக. "இனிமேல் இப்படிக் கோபப் போர் வராது. எப்படியாவது சமாதானம் செய்து மாற்றிவிடலாம்" என்று நினைத்தேன். ஆனால், நான்தான் மாறிவிட்டேன். அவருக்கு அடிக்கடி வந்த கோபத்தைக் கண்டு நான் கோபப்பட்டு, குழந்தைகள் பிறந்து, வளர வளர சண்டைகள் பெருக, இப்போது வயதாகிவிட்டது. பையன்களும் பெரியவர்களாகி செட்டில் ஆகிவிட்டார்கள். இவர் ரிடையர் ஆகி, பொழுதைப்போக்க வயலின் கற்றுக்கொண்டு, அந்தச் சப்தம் வேறு என்னைத் துளைக்கிறது. ஆக மொத்தம் நான் அவ்வப்போது வெறி பிடித்தாற்போல் கத்துகிறேன். மூச்சிரைக்கிறது. அவரை இனிமேல் மாற்றமுடியாது. எனக்குக் கோபம் வராமல் தடுக்க என்ன வழி? Anger Management என்று சொல்கிறார்களே என்று கூகிளில் தேடிப்பார்த்தேன். என் நிலைமை மாறவில்லை. உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதா என்று கேட்பீர்கள்; இருக்கிறது. டயாபிடீஸ் இருக்கிறது. ஆர்த்ரைடீஸ் இருக்கிறது. எல்லாம் இருக்கிறது. அதையெல்லாம் ஏதோ மருந்தைப் போட்டுக்கொண்டு மேனேஜ் செய்கிறேன். இந்தக் கோபம் மட்டும் என் கன்ட்ரோலுக்கு வரவில்லை.

இப்படிக்கு
...................
அன்புள்ள சிநேகிதியே,

சுதந்திரம் போலக் கோபம் என்பது தனி மனித உரிமை என்று எல்லாரும் நினைக்கிறோம். எல்லா ஜீவராசிகளுக்கும் கோபம் வரும். அந்தந்த இனத்திற்கேற்ப பாய்ச்சல், சீறுதல், கடித்தல் என்று கோபத்தை வெளிப்படுத்தும். ஆனால், மனிதர்களுக்கு மட்டும் கோபம் வெளிப்படும் பரிமாணங்கள் எக்கச்சக்கம். முன்கோபம், பின்கோபம், சைடுகோபம், sink-கோபம், sliding-கோபம், Tension கோபம், Tat-கோபம், Hunger Anger என்று சகஸ்ரநாமமே எழுதிவிடலாம். கோபம் வரும். அதை எப்படிக் கையாள்கிறோம் என்பதுதான் முக்கியம். இதுவும் diabetic control போலத்தான். பொதுவாகக் கோபம் என்பது ஒரு sign of helplessness and the sign of self pride. ட்ராஃபிக்கில் மாட்டிக்கொள்கிறோம். கோபம் வருகிறது. கடும் வேலைகளுக்கிடையே ஒரு ஃபோன் கால் வந்து மூடை நாசமாக்குகிறது. "இதைச் செய்" என்று மனைவியிடம் சொல்லியிருப்போம். "இதைச் செய்யாதே" என்று குழந்தைகளை எச்சரித்திருப்போம். ஆனால் அதற்கு எதிர்மாறாக நடக்கும்போது "என்னை மீறி" என்ற எண்ணம் கோபப்பட வைக்கிறது. கோபம் என்பது நெருப்புப்போல. நெருப்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால், அதை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிந்துதான் உபயோகிக்க வேண்டும்.

உங்கள் விஷயத்தில் கோபம் என்ற ஈகோ உங்களை எரிக்கவில்லை. எங்கேயோ விட்டுக்கொடுத்து கோபத்தால் சண்டையை ஒரு விளையாட்டாக்கி இத்தனை வருடம் ஒன்றாக வாழ்ந்துவிட்டீர்கள். பொதுவாகக் கோபம் வந்தால் சண்டை போட்டு ஒருவர் மனதை ஒருவர் புண்படுத்திக் கொள்வோம். மறுபடியும் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிடுவோம். இனிமேல் இருக்கும் வாழ்க்கையை ஒன்றாக, நன்றாக, அமைதியாக நடத்தவேண்டும் என்று நினைத்துத்தான் வாழ்கிறோம். ஆனால், அடுத்த நிமிடம் ஏதாவது எதிர்மாறாக நடந்துவிடும். அவ்வளவுதான். கோபம் வரும். சண்டையில் வார்த்தைகள் வெடிக்கும். அந்த வெடிக்கும் வார்த்தைகளை புஸ்வாணமாக எடுத்துக்கொண்டால் கோபத்திற்கு வடிகால் கிடைத்துவிடும். சண்டை நின்று உடனே சமாதானம் வந்துவிடுகிறது. Anger - Argument - Attack இவற்றின் பேலன்சில்தான் இருக்கிறது வாழ்க்கை. எந்த வாக்குவாதத்தில், எந்தச் சொல், எது போன்ற எதிர்ப்பு உறவை முறித்துவிடும் என்பதை உணர்ந்துகொண்டு விட்டால், கோபத்தின் உத்வேகம் இயல்பாகவே குறைந்துவிடும். இதுவே பரவாயில்லை. Silent Anger என்ற ஒன்று இருக்கிறது. அது இன்னும் ஆபத்தானது. ஆகவே, கவலைப்படாதீர்கள். கோபப்படுங்கள். உங்கள் கணவர் ஓய்வு பெற்றுவிட்டார். வீட்டில்தான் இருப்பார். அவருக்குப் பொழுதுபோக வயலின் வாசிக்கத்தான் செய்வார். இதெல்லாம் இயல்பாக நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள்தாம். These are all the realities which we have to come to terms with.

ஆனால், நான் அவரை ஆதரிக்கிறேன் என்று மட்டும் நினைத்துக்கொண்டு விடாதீர்கள். உங்களுக்குப் பிடித்ததைச் செய்வதற்கும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், பிடிவாதமாக, அவரது வயலின் பிடிக்கவில்லை என்று நாம் தபலா கற்றுக் கொள்ளும்போதுதான் ஆரம்பிக்கிறது உண்மையான சண்டை. என்னுடைய கணிப்பில் நீங்கள் அந்த அளவுக்குக் கோபத்தைக் கொண்டு போகிறவர் அல்ல. இல்லாவிட்டால் இத்தனை வருடம் தாக்குப்பிடித்திருக்க மாட்டீர்கள். வயது, உங்கள் உடல் உபாதைகள் எல்லாம் சேர்த்து உங்களை அடிக்கடிக் கோபப்பட வைக்கிறது. ஆனால், நீங்கள் இதை உணர்ந்துகொண்டு விட்டால் மறுமுறை நீங்கள் சண்டை போடும்போது உங்களுக்கே உங்கள் கோபத்தின் தன்மை புரிந்துவிடும்.

இந்தக் கோபத்தைப் பற்றி ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு என்னிடம் விஷயம் இருக்கிறது. அதிலிருந்து சிலவற்றை இரண்டு பகுதிகளாக வரும் இதழ்களில் எழுத இருக்கிறேன்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்
For personal Enquiry: drcv.listens2u@gmail.com
Share: 




© Copyright 2020 Tamilonline