|
பிப்ரவரி 2002 : குறுக்கெழுத்துப்புதிர் |
|
- வாஞ்சிநாதன்|பிப்ரவரி 2002| |
|
|
|
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.
ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)
குறுக்காக
1. செய்யுள் பயிலாத நாய் வால் இனிப்பதில்லை (5) 6. இடுப்புப் பிரதேசம் விலகிச் செல்ல உண்டாகும் (4) 7. பாதி கூற உள்ளே போடுவது தடுமாறச் செய்யும் (4) 8. ஒரு வகைச் செய்யுளுக்குக் காப்பு ஜாக்கிரதையாகக் கவனித்தல் (6) 11. தையா? கரியா? மன்னர் தலைவனே ஒழுங்காக மாற்றிக்கொள் (6) 14. முழுமையற்ற வனத்தால் வாழ்பவன் சுரம் கேட்பது ஏமாற்றுக்காரனிடமா?(4) 15. சீரிய தலைவருக்குச் சாமரம் வீசி மயக்கு (4) 16. மோதிரத்திற்கருகிலிருக்கும் சரடு தொடங்காமல் நவில் (5)
நெடுக்காக
2. உள்ளே ஒரு பாதி செய்ய வேண்டிய பணி மாலை ஆகாயத்திலிட்டுச் செல்லும் (4) 3. ஒருவன் மேல் ஆசை பொங்கும் போதும் எழுதப்படும் (3, 3) 4. சக்கரத்தை நிலைப்படுத்த சிலுப்பா அங்கயற்கண்ணி கடைசியில் (4) 5. மார்கழிநாள் தின்பண்டம் வெளிப்பக்க இன்பம்தோன்ற வரும் (5) 9. கண்டுக்கா வேதியர் தலைவனிடம் காப்பாற்ற முறையிடு (6) 10. ராம கரணம் துன்பத்துள் ஆழ்த்த சோழ இளவரசி (5) 12. வேள்வியில் சரியான முதலீடு செய்ய சும்மா கேட்பது (4) 13. மிகவும் பெரிய மலர் ஈ எல்லைகளற்ற நகரம் சேர்ந்தது (4) |
|
வாஞ்சிநாதன் vanchi@chennaionline.com
குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்
குறுக்காக: 1. பாகற்காய் 6. இடைவெளி 7. இடறல் 8. கண்காணிப்பு 11. மரியாதையாக 14. வேடதாரி 15. வசீகரி 16. நடுவிரல்
நெடுக்காக: 2. கருடன் 3. காதல் கவிதை 4. கடையாணி 5. களிப்புற 9. காக்க வேண்டு 10. அமராவதி 12. யாசகம் 13. பூதாகர |
|
|
|
|
|
|
|