தெரியுமா?: திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி, எடிசன் (NJ)
|
|
தெரியுமா?: தமிழர் வடிவமைத்த ரூபாய்க் குறியீடு |
|
- |ஆகஸ்டு 2010| |
|
|
|
|
|
பார்த்தவுடனேயே $ என்றால் என்னவென்று தெரியும். டாலர் என்று எழுத வேண்டியதில்லை. இதுபோல இங்கிலாந்தின் பவுண்டு ஸ்டெர்லிங், ஜப்பானிய யென், யூரோ போன்ற சில நாணயங்களுக்கே அவற்றுக்கான குறியீடு உண்டு. இந்திய ரூபாயை ரூ., Rs., INR என்பது போல எழுத்துக்களால் குறித்து வந்தார்கள் இதுவரை.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
உலக அரங்கில் ரூபாய்க்கு ஏற்பட்டுள்ள மதிப்பு மற்றும் ஆற்றலுக்கு ஏற்ப அதற்கென்று ஒரு குறீயீட்டைப் படைக்கச் சொல்லி ஒரு போட்டியை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. போட்டிக்கு வந்திருந்தவை 3,000 குறியீடுகள்.
உதயகுமார் என்ற தமிழர் மேலே கண்ட குறியீட்டை வடிவமைத்து ரூ. 250,000 பரிசு வென்றிருக்கிறார். இதன் அடிப்படை இந்திய எழுத்தான தேவநாகரி என்பதோடு இதில் R என்பதன் சுவடும் இருப்பது இதன் வெற்றிக்குக் காரணங்கள். 32 வயதான உதயகுமார் சென்னையைச் சேர்ந்தவர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஆர்க். பட்டம் பெற்றார். இதில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார். பிறகு மும்பை ஐ.ஐ.டி.யில் தொழில் டிசைனிங் பிரிவில் முதுகலைப் பட்டமும், தொடர்ந்து முனைவர் (பி.எச்டி.) பட்டமும் பெற்றுள்ளார். உதயகுமார், கவுஹாத்தி ஐ.ஐ.டி.யின் வடிவமைப்பு துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட உதயகுமார் அதிலும் பல பரிசுகள் பெற்றுள்ளார். |
|
|
|
|
More
தெரியுமா?: திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி, எடிசன் (NJ)
|
|
|
|
|
|
|