Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
October 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
மாயாபஜார்
தினை உருண்டை
தினை (Quinoa, கீன்வா) தயாரிப்புகள்
- கோமதி ஜானகிராமன்|அக்டோபர் 2013||(1 Comment)
Share: 
Click Here Enlargeகீன்வா என்பது தினையின் ஒருவகை. தேனும் தினை மாவும் முருகனுக்குப் பிடித்தவை. இந்தத் தினையைச் சாப்பிட இப்போதெல்லாம் மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா என்ன? எப்படியெல்லாம் பக்குவம் செய்து சாப்பிடலாம் என்பதை நான் சொல்லப் போகிறேன்.

தினை அடை

தேவையான பொருட்கள்:
தினை வறுத்துப் பொடித்தது - 1/2 கிண்ணம்
வெல்லம் - 1/2 கிண்ணம்
தண்ணீர் - 3/4 கிண்ணம்
தேங்காய்ப் பல் - சிறிதளவு
ஏலத்தூள் - சிறிதளவு

செய்முறை:
3/4 கிண்ணம் தண்ணீர் நன்கு கொதித்ததும் வெல்லம் சேர்த்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து 1/2 கிண்ணம் தினை, தேங்காய்ப் பல், ஏலத்தூள் சேர்த்துக் கிளறவும். ஆறியவுடன் நோன்பு அடைபோல் தட்டி, ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். வெண்ணெயுடன் சாப்பிடச் சுவை அலாதியாக இருக்கும்.
கோமதி ஜானகிராமன்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா
More

தினை உருண்டை
Share: