தெரியுமா?: தமிழ் ஆன்லைன் தமிழ்க் கல்வி நிதிக்கொடை தெரியுமா?: 2013ம் ஆண்டின் சிறந்த டோஸ்ட்மாஸ்டர் தெரியுமா?: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது – 2012
|
|
தெரியுமா?: மேடையேறுகிறது 'தி ஜங்கிள் புக்' |
|
- |ஜூலை 2013| |
|
|
|
|
|
இந்தியக் காடுகளின் பின்னணியில் 'தி ஜங்கிள் புக்' என்ற சிறுகதைத் தொகுதியை ருட்யார்ட் கிப்ளிங் 1893ல் எழுதினார். அந்த வனவிலங்குகளும் மோக்லியும் வால்ட் டிஸ்னியின் கைவண்ணத்தில் உயிர்பெற்றெழுந்து அதே பெயரில் கார்ட்டூன் படக் காவியமானது 1967ல். மீண்டும் நாட்டிய நாடகமாக மேரி ஜிம்மர்மேனின் தயாரிப்பாக சிகாகோவின் குட்மன் அரங்கில் ஜூன் 21 தொடங்கி ஆகஸ்ட் 4ம் தேதிவரை ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது.
இந்தியக் கதைத் தயாரிப்புக்கு இந்தியர் பங்களிப்பு இல்லாமலா! எம்மி விருது பெற்ற நடன அமைப்பாளரும் சிகாகோவின் நாட்யா டான்ஸ் தியேட்டரின் கலை இயக்குனருமான ஹேமா ராஜகோபாலன் இதற்கு இந்திய நாட்டிய ஆலோசகராகப் பணிபுரிகிறார். டோனி விருது பெற்ற கிறிஸ்டஃபர் கேட்டல்லி இந்தத் தயாரிப்பின் நடன அமைப்பாளர். இவர்களின் கைவண்ணத்தில் பார்க்கவும் கேட்கவும் திகட்டாத 'பேர் நெசஸ்ஸிடீஸ்' உட்பட்ட பாடல்களுடன் 'பாலு த பேர்' உட்பட நமது செல்லக் கேரக்டர்கள் மீண்டும் மேடையில் உலவப் போகிறார்கள். ஹேமா ராஜகோபாலனுடன் நேர்காணல் வாசிக்க.
நாட்யா வழியே சீட்டு வாங்கினால் சில இருக்கைகளுக்கு பத்து டாலர் தள்ளுபடி உண்டு. இங்கே வாங்குக: goodmantheatre.org
தள்ளுபடி பெற promo code - NATYA. இது குட்மனின் மொபைல் தளத்தில் கிடைக்காது. |
|
செய்திக்குறிப்பிலிருந்து நிழற்படம்: லிஸ் லாரென் |
|
|
More
தெரியுமா?: தமிழ் ஆன்லைன் தமிழ்க் கல்வி நிதிக்கொடை தெரியுமா?: 2013ம் ஆண்டின் சிறந்த டோஸ்ட்மாஸ்டர் தெரியுமா?: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது – 2012
|
|
|
|
|
|
|