Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
July 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | பொது | அமெரிக்க அனுபவம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
பொது
தெரியுமா?: தமிழ் ஆன்லைன் தமிழ்க் கல்வி நிதிக்கொடை
தெரியுமா?: 2013ம் ஆண்டின் சிறந்த டோஸ்ட்மாஸ்டர்
தெரியுமா?: மேடையேறுகிறது 'தி ஜங்கிள் புக்'
தெரியுமா?: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது – 2012
- |ஜூலை 2013|
Share: 
Click Here Enlargeகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ரொறொன்ரோவில் ஜூன் 15ம் தேதி ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என பல இலக்கிய வகைப்பாடுகளில் இயங்கியவர்.
இவ்விழாவில் பிற பிரிவுகளில் விருது பெற்றோர்: புனைவு இலக்கியப் பிரிவில் கண்மணி குணசேகரன் ('அஞ்சலை' நாவல்); அபுனைவு இலக்கியப் பிரிவில் பிரபஞ்சன் ('தாழப் பறக்காத பரத்தையர் கொடி'), அப்பு ('வன்னி யுத்தம்'); கவிதைப் பிரிவில் தேவ அபிரா ('இருள் தின்ற ஈழம்'), நிலாந்தன் ('யுகபுராணம்'); மொழிபெயர்ப்புப் பிரிவில் எம்.ஏ. சுசீலா ('அசடன்' ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு), முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை சங்கநூல்கள் மொழிபெயர்ப்புக்கு வைதேஹி ஹேர்பர்ட் (தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு).
Click Here Enlargeமாணவர் கட்டுரைப் போட்டியில் மீரா ரகுநாதன் பரிசு பெற்றார். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சிறப்பு விருது ஆசீர்வாதம் தம்பதியினருக்கு வழங்கப்பட்டது. சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட 'கணிமை விருது' முகுந்தராஜ் சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவுக்குப் பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகைதந்து சிறப்பித்தனர்.

செய்திக்குறிப்பிலிருந்து
More

தெரியுமா?: தமிழ் ஆன்லைன் தமிழ்க் கல்வி நிதிக்கொடை
தெரியுமா?: 2013ம் ஆண்டின் சிறந்த டோஸ்ட்மாஸ்டர்
தெரியுமா?: மேடையேறுகிறது 'தி ஜங்கிள் புக்'
Share: