ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும் குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் கலைஞர் சிம்புவின் வாடா வாடி பரத் நடிக்கும் ஆறுமுகம் சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை விவேக்கின் புதிய படம்
|
|
நாகாவின் அனந்தபுரத்து வீடு |
|
- அரவிந்த்|டிசம்பர் 2008| |
|
|
|
மர்மதேசம், சிதம்பர ரகசியம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களால் புகழ்பெற்றவர் இயக்குநர் நாகா. இவர் தற்போது இயக்குநர் ஷங்கரின் S பிக்சர்ஸ் சார்பாக 'அனந்தபுரத்து வீடு' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். திகில் மற்றும் மர்மம் கலந்த இப்படத்தில் நந்தா கதாநாயகனாக நடிக்கிறார். முதலில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட மீரா ஜாஸ்மினுக்குப் பதில் தற்போது 'சாயா சிங்' கதாநாயகியாக நடிக்கிறார். இதுவரை S பிக்சர்ஸ் தயாரித்தவற்றிலேயே அதிக பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்படவுள்ளது.
இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்துவே எழுதுகிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரமாக ஆரியன் எனும் மூன்று வயது சுட்டிக் குழந்தை நடிக்கிறது. இவர்களுடன் கிருஷ்ணா, கலைராணி மற்றும் பல புதுமுகங்கள் நடிக்கின்றனர். அமெரிக்காவில் MFA பயின்ற அருண்மணி பழனி இப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். ரமேஷ்கிருஷ்ணா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கேரளாவின் மூணாறு போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. |
|
அரவிந்த் |
|
|
More
ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும் குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் கலைஞர் சிம்புவின் வாடா வாடி பரத் நடிக்கும் ஆறுமுகம் சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை விவேக்கின் புதிய படம்
|
|
|
|
|
|
|