நினைவிருக்கிறதா நிரோஷாவை... ஆயிரம் பேரைக் கொண்டு பிரம்மாண்ட பாடல்காட்சி தம் திருட்டு வி.சி.டி.க்கு தீர்வு என்ன?
|
|
நடிகராகிய இயக்குநரின் சொந்தத் தயாரிப்பு |
|
- யாமினி|ஏப்ரல் 2003| |
|
|
|
பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசியகீதம், வெற்றிக் கொடிகட்டு, பாண்டவர் பூமி ஆகிய படங்களை இயக்கிய சேரன் 'சொல்லமறந்த கதை' படத்தில் நடிகராக அறிமுகமாகியிருந்தார். இதையடுத்து 'ட்ரீம் தியேட்டர்ஸ்' என்ற பட நிறுவனத்தைச் சொந்தமாகத் தொடங்கி 'ஆட்டோகிரா·ப்' என்ற படத்தைத் தானே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியும் வருகிறார். இந்தப் படத்தின் கதாநாயகனும் இவர்தான்.
மூன்று வித்தியாசமான வேடங்களில் இந்தப் படத்தில் இவர் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை கோபிகா நடிக்கிறார். இவர் தவிர படத்தில் மேலும் 4 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். விஜய் மில்ட்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் பரத்வாஜ். கேரளாவின் ஆலப்புழையிலும் குட்டநாடு பகுதிகளிலும் முதல்கட்ட படப்பதிவு நடந்திருக்கிறது. காதல் ஒன்றே வாழ்க்கை அல்ல. காதல் தோல்வி ஏற்பட்டால் துவண்டு போய்விடாமல் வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டவேண்டும் என்பதுதான் இந்தப்படத்தில் சேரன் சொல்லப்போகும் கருத்து. |
|
தொகுப்பு:யாமினி |
|
|
More
நினைவிருக்கிறதா நிரோஷாவை... ஆயிரம் பேரைக் கொண்டு பிரம்மாண்ட பாடல்காட்சி தம் திருட்டு வி.சி.டி.க்கு தீர்வு என்ன?
|
|
|
|
|
|
|