மேலே உள்ள படத்துடன் தொடர்புடைய ஐந்து வாக்கியங்களை எழுதுங்கள்:
|
|
|
1. நீண்ட உடலிருக்கும் தூண் இல்லை உடலில் சட்டையிருக்கும் உயிரில்லை துயிலுக்கோ சுகமிருக்கும் மெத்தையில்லை - அது என்ன?
2. நீரிலே உயிர் பெற்று நிலத்திலே நீர் இறைப்பான் - அவன் யார்?
3. நிரப்பலாம் பிடிக்க முடியாது உணரலாம் காண முடியாது - அது என்ன?
4. தூரத்தில் நின்று பார்க்கக் கறுப்பாயிருந்தது பக்கத்தில் போய்ப் பார்க்க பளபளப்பாயிருந்தது கையில் எடுத்துப் பார்க்கச் சிவப்பாயிருந்தது சுவைத்துப் பார்க்க இனிப்பாயிருந்தது - அது என்ன?
5. தேடாமல் கிடைப்பது தேடும் செல்வத்தைக் குறைப்பது - அது என்ன?
6. தவழும்போது ஒரு பெயர் விழும்போது ஒரு பெயர் உருளும்போது ஒரு பெயர் - அது என்ன?
7. டேரா கிழிந்து போனால் தைக்க முடியாது ராஜாத்தி ஓடிப்போனால் பிடிக்க முடியாது ரோஜாப்பூ உதிர்ந்து போனால் பொறுக்க முடியாது - அவை என்ன? |
|
8. தலையில்லா ராசா வெட்டிய குளத்துக்குக் கரையில்லை கரையில்லாத குளத்தில் முளைத்த கோரைக்கு வேரில்லை வேரில்லாத கோரையைத் தின்ன வந்த மானுக்குக் காலில்லை காலில்லாத மானை எய்ய வந்த வேடனுக்கு அம்பில்லை - அது என்ன?
9. சுத்தி சூரமுள்ளு நடுப்புற நல்ல வெல்லம் - அது என்ன?
10. தச்சன் செய்யாத பெட்டி தானே திறந்து மூடும் பெட்டி - அது என்ன?
விடைகள்
1. தலையணை 2. மின்சாரம் 3. காற்று 4. தேன்கூடு 5. சோம்பல் 6. மேகம் - மழை - நீர் 7. வான் - நிலா - விண்மீன் 8. சூரியன் - கடல்பாசி - மீன் - வலை 9. பலாப்பழம் 10. கண் |
|
|
More
மேலே உள்ள படத்துடன் தொடர்புடைய ஐந்து வாக்கியங்களை எழுதுங்கள்:
|
|
|
|
|
|
|