கோதுமை அல்வாக்கள்
|
|
|
|
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 1 கிண்ணம் புளித்த கெட்டித்தயிர் - 2 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் கடுகு சீரகம் உளுத்தம் பருப்பு பெருங்காயம் நறுக்கிய பச்சைமிளகாய் நறுக்கிய கொத்துமல்லி
செய்முறை:மாவு, தயிர், உப்பை நன்றாகக் கட்டி இல்லாமல் தோசைமாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். நான்-ஸ்டிக் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு முதலியவற்றைத் தாளிக்கவும். அதில் கரைத்த மாவைக் கொட்டி, மிதமான தீயில் கட்டிதட்டாமல் கிளறவும். கலவை நன்கு உருண்டு திரண்டு அல்வாப் பதம் வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டி, மெலிதாக, சமமாகப் பரப்பவும். மேலே மல்லித்தழையைத் தூவி அலங்கரிக்கவும். ஆறியதும் துண்டுகளாக்கி இனிப்புடன் பரிமாறவும்.
கோதுமை மாவுக்குப் பதில் அரிசி மாவில் செய்தாலும் ருசியாக இருக்கும். |
|
வசுமதி கிருஷ்ணஸ்வாமி, ரோச்செஸ்டர், மின்னசோட்டா |
|
|
More
கோதுமை அல்வாக்கள்
|
|
|
|
|
|
|