ராதா சுப்ரமணியம் கலைமாமணி வீ.கே.டி.பாலன்
|
|
|
|
|
கே: 'வா சகி... வா சகி... வள்ளுவன் வாசுகி...' பாடல் அனுபவத்தைச் சொல்லுங்கள்.... ப: 18வது வயதிலேயே மம்மூட்டி போன்ற சீனியர் நடிகர் ஒருவருக்குப் பாடியது அரிய அனுபவம். நான் நன்றி சொல்ல வேண்டியது இசையமைப்பாளர் வித்யாசாகர் சாருக்குத்தான்.
கே: கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை இரண்டும் கற்றிருக்கிறீர்கள் அல்லவா? ப: கர்நாடக சங்கீதத்தில் தேர்ந்த குடும்பத்தில் வளர்ந்தபோதும் நான் கற்றது அதன் அடிப்படையை மட்டுமே. கேள்வி ஞானத்தில்தான் திறமையை வளர்த்துக் கொண்டேன்.
கே: விகடன் படத்தில் கதாநாயகானாக நடித்த பின் உங்களைத் திரைப்படங்களில் காணோமே? ப: எனது முதல், முழுமையான ஆர்வம் என்பது இசைமீது மட்டுமே. படத்தில் நடித்தது தற்செயல். இசைதான் என் தொழில்.
கே: உங்கள் இசை வாழ்வில் ஒரு சுவையான அனுபவம் சொல்லுங்களேன்... ப: கலைத்துறையில் தினமும் புதுப்புது அனுபவங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். தனித்துச் சொல்ல இயலாது.
கே: ஆளை மயக்கும் உங்கள் அழகுக் குரலை எப்படிப் பராமரிக்கிறீர்கள்? ப: காலத்திற்கும், குரலிற்கும், உடலிற்கும் ஏற்ற உணவுகளைச் சாப்பிடுவேன். தினமும் பிராணாயாமம், குரல் பயிற்சி செய்வேன்.
கே: காதல் அனுபவத்தைக் காதோடு சொல்வீர்களா? ப: காதல் அனுபவம் ஏற்படாத மனிதர்கள் இல்லை. ஆனால் அது தனிப்பட்ட விஷயம்.
கே: உங்கள் பொழுதுபோக்கு... ப: நான் இயற்கையின் ரசிகன். பயணம் பிடிக்கும். பலதரப்பட்ட உணவு வகைகளைச் சமைத்துப் பார்க்கப் பிடிக்கும். இணையம் வழியே விஷயங்களைத் தேடித் தேடிப் படிக்க ரொம்பப் பிடிக்கும்.
கே: உங்களுக்கு மிகவும் பிடித்த பாடகர்? ப: எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள்.
கே: அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்? ப: 'நான்' பாடத்தில் இடம் பெற்ற "மக்கா யேலம் மக்காயேலம் காய பாஹூவா". |
|
|
கே: பெற்ற விருதுகள்... ப: 2000மாவது ஆண்டில் 'பாரதி' படத்தில் "நிற்பதுவே நடப்பதுவே" பாடலுக்காகத் தமிழக அரசின் விருது. 'காதல் கொண்டேன்' படப் பாடல்களுக்காக 'தினகரன் மெடிமிக்ஸ் விருது', 'கண்ணதாசன் விருது'. 2003ம் ஆண்டில் கனடாவில் உள்ள 'United Tamil Councils of Canada' அமைப்பினர் தந்த 'வசீகரக் குரலோன்'.
கே: மிகப் பிடித்த உணவுகள்? ப: இந்தியன், சைனீஸ்.
கே: பாடகர் ஆகியிருக்காவிட்டால்.... ப: சாஃப்ட்வேர் ப்ரொஃபஷனல் ஆகியிருப்பேன்.
கே: மிகவும் பிடித்த உடை? ப: ஜீன்ஸ், கேஷூவல்ஸ்
கே: பார்த்த வெளிநாடுகளில் மிகவும் பிடித்தது? ப: அமெரிக்கா
கே: அமெரிக்க ரசிகர்களுக்கு என்ன ஸ்பெஷலாகத் தரப் போகிறீர்கள்? ப: சிறந்த பாடல்கள். நான் வேறு என்ன தர முடியும்? அமெரிக்க ரசிகர்களுக்கு எனது மெலடீஸ் ரொம்பப் பிடிக்கும்.
கே: சமீபத்தில் படித்த புத்தகம்? ப: ரோண்டா பைர்ன் எழுதிய 'தி மேஜிக்'.
கே: திரும்பத் திரும்பப் பார்த்து ரசிக்கும் படம்? ப: ப்ரேவ் ஹார்ட், அமைதிப்படை, சிங்காரவேலன், பாட்ஷா, ரமணா மற்றும் தில் சாஹ்தா ஹை.
கே: சாதிக்க விரும்பும் ஒரு விஷயம்.. ப: இவ்வுலகில் வாழும்வரை மக்களின் அன்புக்குப் பாத்திரமாக அதில் தழைப்பது!
தமிழில்: காந்தி சுந்தர் |
|
|
More
ராதா சுப்ரமணியம் கலைமாமணி வீ.கே.டி.பாலன்
|
|
|
|
|
|
|