Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
குதிரைவாலி பிடி கொழுக்கட்டை
குதிரைவாலி சமையல் வகைகள்
- தங்கம் ராமசாமி|ஆகஸ்டு 2017||(1 Comment)
Share:
சிறுதானியங்கள் நமது சமையலறையில் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் உங்களுக்குச் சில குதிரைவாலி (Barnyard millet) தயாரிப்புகள்.

குதிரைவாலி இட்லி

தேவையான பொருட்கள்
குதிரைவாலி அரிசி - 1 கிண்ணம்
புழுங்கலரிசி - 1/2 கிண்ணம்
உளுத்தம்பருப்பு - 1/2 கிண்ணம்
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
கொள்ளு (முளை கட்டியது) - 1/2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
அரிசிகள், பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் நான்கு மணி நேரம் ஊறப்போட்டுக் களைந்து மிக்சியில் இட்லிக்கு அரைப்பதுபோலச் சற்றுக் கொரகொரப்பாக அரைக்கவும், அரைக்கும்போது முளைகட்டிய கொள்ளும் சேர்த்துப் போட்டு அரைத்து உப்புப் போட்டு வைத்துவிடவும். மறுநாள் இட்லி வார்க்கவும். இது மிகவும் மிருதுவான சுவையான இட்லி. ஆர்த்ரைடிஸ், டயபடீஸ்காரர்களுக்கு மிகவும் நல்லது. வெங்காயம், தக்காளிச் சட்னியுடன் சாப்பிடலாம்.
தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி
More

குதிரைவாலி பிடி கொழுக்கட்டை
Share: 




© Copyright 2020 Tamilonline