கோகிலா முதல் கனாகாலம் வரை
இயக்குநர் பாலுமகேந்திராவின் கலையுலக சேவையை கெளரவிக்கும் விதமாக ஏப்ரம் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள 'ஜனாக்ஸ்' திரை அரங்கில் ஒருவாரத்துக்கு விழா ஒன்றை நடத்த இருக்கிறார்கள்.

'கோகிலா முதல் கனாக்காலம் வரை' என்ற பெயர் கொண்ட அந்த விழாவில் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த படங்கள் வரிசையாகத் திரையிடப்படவிருக்கின்றன.

விழாவுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கம் அல்லது கலைவாணர் அரங்கத்தில் விழா நடைபெறும்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், இயக்குநர் மணிரத்தினம் என்று பல பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com