செப்டம்பர் 25, 2011 அன்று லெக்ஸிங்டன் நேஷனல் ஹெரிடேஜ் மியூசியத்தில் ஜெயஸ்ரீ பாலராஜாமணி அவர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது, சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பாஸ்டனின் லெக்ஸிங்டன் பகுதியில் பரதக்கலை நடனப்பள்ளியை நடத்தி வரும் அவர் பூனேயில் உள்ள பாரதிய சமாஜ சேவா கேந்திரம் (Bharathiya Samaj Seva Kendra, Pune) என்னும் அமைப்புக்கு நிதிதிரட்டும் முகமாக இந்நிகழ்ச்சியை நடத்தினார். பாஸ்டனைச் சேர்ந்த நடராஜ் இசைக் குழுவினர் இசை வழங்கினர். வாய்ப்பாட்டு இல்லாமல் இசைக்கருவிகளின் இசைக்கு அவர் பரதம் ஆடியவிதம் பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. ஜெயஸ்ரீ அவர்கள் புஷ்பாஞ்சலியில் ஆரம்பித்து வரிசையாக சிவ தாண்டவம், கங்கை நதியின் பிறப்பு, ஆப்பிரிக்காவின் போர் நடனம், என்ன தவம் செய்தனை போன்றவற்றுக்கு ஆடி, முடிவாக ராகமாலிகையில் தில்லானா ஆடினார். முகபாவங்கள் அருமை. குறிப்பாகப் போர் நடனத்தில் ரௌத்திரம் மிளிர்ந்தது. எதிர்பார்த்ததைவிட அதிக நிதி திரட்டி கேந்திரத்துக்கு அவர் அளித்தார். சிறு குழந்தைகள் கூடத் தமது சேமிப்பிலிருந்து நிதி அளித்தது பார்வையாளர்களை நெகிழ வைத்தது.
மேலும் விவரங்களுக்கு: www.bsskindia.org
செய்திக் குறிப்பிலிருந்து |